Show all

அறிவியலை, ஆங்கில மொழியில் வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள்: அண்ணா பல்கலைகழக துணை வேந்தர்

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய் மொழியில் பயின்றால் மட்டுமே அறிவியலை புரிந்து கொள்வதற்கு எளிமையாக இருக்கும், ஆங்கில மொழியில் அறிவியலை வெறுமனே மனப்பாடக் கல்வியாக பயின்று வருகின்றனர் தமிழக மக்கள். அப்புறம் அறிவியல் படைப்பாற்றல் திறன் தமிழகத்தில் எப்படி வளரும்? என்று அண்ணா பல்லைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 18வது உலகத் தமிழ் இணைய மாநாடு இன்னும் ஆறு மாதங்களில் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: 'இன்றைய இளைய தலைமுறையினர் தமிழ் மொழியில் பயில்வதை தயக்கம் காட்டுகின்றனர். தாய் மொழியில் படித்தால் தான் அறிவியல் மற்றும் கணிதங்களை புரிந்து கொள்ள முடியும்.

 

ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழியில் தான் அறிவியலை படிக்கிறார்கள். அப்போது தான் அறிவியல் கோட்பாடுகள் குழந்தைகளுக்குப் புரியும்.

தற்போது 18வது உலகத்தமிழ் இணைய மாநாடு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. தானியங்கி கருவிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு என்பதே உலகத்தமிழ் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.' இவ்வாறு துணைவேந்தர் சூரப்பா பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,062.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.