Show all

இளையராஜா சிறப்பாக இசையமைத்தது இராமராஜன் படங்களுக்குதாமா!

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று இரண்டாவது நாளாக நடந்த 'இளையராஜா 75' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், 'இளையராஜாவின் திறமை தெய்வத்தின் அருள், இளையராஜா. இசையின் 'தான்தோன்றி நடுகல்லாக' இருக்கிறார் இளையராஜா. அந்த சக்தி 'அன்னக்கிளி' மூலம் அறிமுகமாகி இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கிறது

நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் திருவிழா காலங்களில்; 12 படங்கள் வெளியாகும். அதில் 10 படங்கள் இளையராஜா இசையில் தான் வெளியாகும். ஒரே நாளில் தூக்கமில்லாமல் மூன்று படங்களுக்கு ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அவர் ஒலிப்பதிவு செய்தாலே படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது. அவர் இசையமைத்து வெற்றி பெற்ற படங்கள் எத்தனையோ உள்ளன. பல தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமலே இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

என்னுடைய படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்குத்தான் இளையராஜா நன்றாக இசையமைத்துள்ளார் என ரஜினிகாந்த் கூறினார். 

இந்தக் கருத்தை மறுத்த இளையராஜா, என்னை பொறுத்தவரை இசை தான் தலைமைத்துவம். அப்படி பார்த்தால் ராமராஜன் படங்களுக்கு அதைவிட நன்றாக இசையமைத்துள்ளேன் என்றார்.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.