Show all

நேற்று சசிகலாவின் அச்சம் அவரை சிறைக்கு அனுப்பியது! இன்று பன்னீர்-எடப்பாடியின் அச்சம் இவர்களை வீட்டுக்கு அனுப்புமா

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா காலத்தில் ஒட்டு மொத்த அதிமுகவும் சசிகலா நிருவாகத்தில் தான் இருந்தது. அதிமுக தலைவர்கள் செயலலிதாவைச் சந்திக்க சென்று சசிகலாவை சந்தித்து வருவார்கள். அதிமுகவில் சசிசலாவிற்கு கும்பிடு போடாத தலைவர்கள் இல்லை. 

ஆனாலும் செயலலலிதாவின் இறப்பிற்கு பின், மக்கள் தன் தலைமையை ஏற்பார்களா என்ற அச்சத்தில் பன்னீரை வைத்து களஆய்வு செய்தார் சசிகலா. அவருக்கு மக்களிடம் இருந்து பச்சை சைகை கிடைக்கவே, களமிறங்கினார் சசிகலா.

ஆனால் நேராக வழுக்கிக் கொண்டு போய் பரப்பன அக்ரகார சிறையில் விழுவது போல அவருக்கு வழி வடிவமைக்கப் பட்டது. 

சாம, பேத, தான, தண்ட முறையில் தற்போது ஆட்சியில் அமர்ந்து விட்ட எடப்பாடி-பன்னீர் தமிழக மக்கள் மீது நம்பிக்கை வைக்காமல், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் கையைப் பற்றி நடைபோட முயன்று வருகிறது.  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய, மாநில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு தொடங்கி விட்டது; அது பரம ரகசியமாக நடந்து வருகிறது என துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

திமுக - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்த அதிமுக அதிரடி வியூகம் வகுத்து மின்னல் வேகத்தில் பணிகள் நடப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.

தமிழகம், புதுவையில் 40 தொகுதிகள் உள்ளன. இவற்றில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து அ.தி.மு.க., இன்று முதல் விருப்ப மனுக்களை வாங்க உள்ளது; வரும் சனிக்கிழமை வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. கூட்டணி பேச்சு, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு போன்றவற்றுக்கும், அ.தி.மு.க., சார்பில், மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக - அதிமுக கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகமாகி உள்ளதை துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சூசகமாக தெரிவித்துள்ளார். 

கட்சித் தொண்டர்கள் யார் வேண்டுமானாலும் விருப்ப மனு கொடுக்கலாம். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பும், நட்பு உணர்வுள்ள, மாநில, தேசிய கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

அந்தப் பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. அனைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பின், கூட்டணி பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக இருப்பதால் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும். கூட்டணி தொடர்பாக கருத்து கூற தம்பிதுரைக்கு உரிமை உள்ளது. இருப்பினும், ஒருமித்த கருத்துடன் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு பன்னீர் செல்வம் கூறினார்.

தேசிய அளவில் பாஜகவுடனும், மாநில அளவில், பாமக - தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன், அதிமுக ரகசிய பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பேச்சு இறுதி கட்டத்தை அடைந்த பின், முறையான அறிவிப்பை வெளியிட, அ.தி.மு.க., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.

நோட்டா எதிர்க்கட்சியுடன் சேர்ந்து சேட்டையில் ஈடுபடும் அதிமுக வீட்;டை நோக்கி அனுப்பப் படுவது உறுதியாகியுள்ளது.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.