Show all

டூடுல் எனும் கோலஓவியம் வரைந்து கூகுள் கொண்டாடுகிறது! இன்று பிரபல ஹிந்தி நடிகை மதுபாலா பிறந்த நாள்

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பிரபல ஹிந்தி நடிகை மதுபாலா பிறந்த நாள். மும்தாஜ் பேகம் ஜெகான் தேகலவி என்பது அவருடைய இயற்பெயர். ஆங்கில ஆண்டு  1950களிலும் 1960களிலும் வெளிவந்த பல வெற்றிகரமான திரைப்படங்களிலும் தோன்றி புகழ்பெற்ற ஹிந்தி நடிகையாவார் மதுபாலா. 

இந்தப் படங்களில் பெரும்பாலானவை இன்று உன்னதமானவையாகவும், இன்றும் கூட ஏற்றுக் கொள்ளப்படக் கூடிவையாகவும் இருக்கின்றன. நர்கிஸ் மற்றும் மீனா குமாரி போன்ற அவருடைய காலத்தைச் சேர்ந்தவர்களைப் போன்று ஹிந்தி திரைகளில் தோன்றிய திறமைமிக்க மற்றும் தாக்கமேற்படுத்தக்கூடிய நடிகைகளுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.

அவர் ஒரு இஸ்லாமியர் என்பதுடன் பழமைவாத பதான் குடும்பத்தில் பிறந்த பதினொரு பேரில் ஐந்தாமவராவார். வறுமையில் வீழ்ந்துவிட்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றும் அவரது தேடலில் அவரது தந்தை மும்பைக்கு குடிபெயர்ந்தார். அங்கே அவர்கள் பல ஆண்டுகளாகப் போராடியதோடு வேலை தேடி மும்பை திரை படப்பிடிப்பகங்களுக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தனர். இளம் மும்தாஜ் தனது ஒன்பதாவது அகவையில் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

அவருடைய முதல் படமான பஸந்த் பெரும் வெற்றிபெற்றது, அதில் அவர் புகழ்பெற்ற நடிகையான மும்தாஜ் ஷாந்தியின் மகளாக நடித்தார். அவர் பிறகு பல படங்களிலும் குழந்தை மின்மினியாக நடித்தார். அவருடைய நடிப்பாலும் திறமையாலும் கவரப்பட்ட புகழ்பெற்ற நடிகையான தேவிகா ராணி அவருடைய பெயரை மதுபாலா என்று மாற்றி வைத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறினார். அவருடைய திறமை மிகத்தெளிவாக வெளிப்பட்டது என்பதுடன் விரைவிலேயே நம்பிக்கைக்குகந்த தொழில்முறை நடிகை என்ற பாராட்டுதலையும் பெற்றார். அவர் அகவையடைந்திருந்த சமயத்தில் அவருடைய தனித்துவமான தோற்றங்கள் மற்றும் உயரமான, எழில் வாய்ந்த தோற்றம் அவர் ஏற்கனவே முன்னணிக் கதாபாத்திரங்களுக்கு தயாராகிவிட்டார் என்பதைக் குறிப்பதாக இருந்தது.

திரைப்பட இயக்குநரான கீதர் ஷர்மா நீல் கமல் திரைப்படத்தில் ராஜ் கபூருடன் அவரை நடிக்க வைத்தபோது அவருடைய திரைப்பட வாழ்க்கையில் முதல் முன்னேற்றம் ஏற்பட்டது. அதுவரை மும்தாஜ் என்று குறிப்பிடப்பட்டு வந்திருந்த அவர் இந்தத் திரைப்படத்திற்குப் பின்னர் மதுபாலா என்ற பெயரைப் பெற்றார். அவருக்கு அப்போது பதினான்கு அகவை. இந்தத் திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், அவர் கவனிக்கப்பட்டார் என்பதுடன் அவருடைய நடிப்பு பாராட்டுதலையும் பெற்றது.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் இரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அழகியாக புகழ்பெற்றார் (திரைப்பட ஊடகம் அவரை திரையில் தோன்றும் வீனஸ் என்று வர்ணித்தது). 

அவருக்கு பதினாறு அகவை மட்டுமே ஆகியிருந்த நிலையில், தன்னுடைய நேர்த்தியான மற்றும் திறமையான நடிப்பால் அவர் அவருடன் நடிக்கும் நடிகரான அசோக் குமாரைக் காட்டிலும் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்று விமர்சகர்கள் குறிப்பிட்டனர். 

மதுபாலாவின் இதயநோய் பிரச்சினை அவர் படப்பிடிப்பு தளத்தில் இருமும் போது இரத்த வாந்தி எடுத்ததிலிருந்து 1950 ஆம் ஆண்டு வெளியுலகுக்குத் தெரியவந்தது. இதயத்தில் ஓட்டை என்று பொதுவாக அறியப்படும் இதயப் பிரச்சினையுடனே அவர் பிறந்திருந்தார். அந்த நேரத்தில் இதய அறுவை சிகிச்சை பரவலான முறையில் செய்யப்படுவதாக இல்லை.

அவருடைய உடல்நலக் கோளாறு திரைப்படத்துறையிலிருந்து ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டது, என்றாலும் 1954 ஆம் நடந்த ஒரு நிகழ்ச்சி திரை ஊடகத்தால் பரவலாகத் தெரிவிக்கப்பட்டது. மதுபாலா எஸ்.எஸ். வாசனின் திரைப்படமான ப{ஹத் தின் ஹீவே திரைப்படத்திற்காக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தார். அவர் முற்றிலும் உடல் நலமற்றிருந்தார் என்பதோடு படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை இரத்த வாந்தி எடுத்தார். வாசனும் அவருடைய மனைவியும் மிகவும் ஆதரவாக அவர் நலமடையும் வரை அவரை அக்கறையோடு பார்த்துக்கொண்டனர். மதுபாலா மிகவும் நன்றியுடையவராக இருந்தார் என்பதோடு அதன் விளைவாக தான் நடித்த திரைப்படமே என்றாலும் முதல் நாள் சிறப்புத் திரையிடலில் கலந்துகொள்வதில்லை என்ற தன்னுடைய சொந்த விதியை ப{ஹத் டின் ஹீவே படத்திற்காக அவர் மீறினார். 

அதைத்தொடர்ந்து மற்றொரு வாசன் தயாரிப்பான இன்சானியத்தில் அவர் நடித்தார். எல்லோரும் சென்னையில் நடந்த நிகழ்ச்சியை மெதுவாக மறந்து போனது, மதுபாலாவைத் தொடர்ந்து பணிபுரியச் செய்தது என்பதோடு அவர் தன்னை ஒரு முதல் தர நடிகையாக நிறுவிக் கொள்ளவும் உதவியது.

அதன் விளைவாக, மதுபாலாவின் குடும்பம் அதிக பாதுகாப்பு உணர்வோடு இருந்தனர். படப்பிடிப்புத் தளங்களில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கையில் அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவையே சாப்பிட்டார். உடல் நலமின்மை அல்லது தொற்று ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறைக்கும் முயற்சியாக குறிப்பிட்ட கிணற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரையும் மட்டுமே குடித்தார். ஏறத்தாழ அவருடைய உடல்நிலை அவருடைய வாழ்நாளை எண்ணத்தொடங்கி அவருடைய வாழ்ககையையும் நடிப்பையும் சுருக்கியது. ஆனால் 1950களில் பெரும்பாலும் அவருடைய உடல் நலமின்மையையும் உடல் குறைபாடுகளையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.

1950களின் முற்பகுதியில் மதுபாலா இந்தியாவிலேயே மிகவும் வேண்டப்படும் நடிகையாக ஆன பின்னர் அவருக்கு ஆங்கிலத்திரையுலகின் மீதான விருப்பமும் தோன்றியது. அவர் தியேட்டர் ஆர்ட்ஸ் போன்ற பல அமெரிக்க இதழ்களிலும் தோன்றினார்.

மதுபாலாவை ஆங்கிலத் திரையுலகில் அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்து விவாதிக்கும் கூட்டம் ஒன்றை கப்ரா ஏற்பாடு செய்தார். மதுபாலாவின் தந்தை அதை மறுத்ததோடு அவருக்கு ஆங்கிலத் திரையுலகிலிருந்து வந்த வாய்ப்பை உறுதியாக முடிவுக்குக் கொண்டுவந்தார்.

சவாலான கதாபாத்திரங்களோடு மிகவும் கௌரவமான திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்தையும் மதுபாலா வெளிப்படுத்தியிருந்தார். 

ஒரு மின்மினியாக, மதுபாலா திரைப்படத் துறையின் உச்சத்திற்கே சென்றார். அந்த நேரத்தில் அருடன் நடித்த மிகவும் பிரபல நடிகர்கள்: அசோக் குமார், ராஜ் கபூர், ரெஹ்மான், பிரதீப் குமார், ஷம்மி கபூர், திலீப் குமார், குரு தத் மற்றும் தேவ் ஆனந்த் ஆவர். மதுபாலா அதே சமயத்தில் காமினி கௌஷல், சுரையா, கீதா பாலி, நளினி ஜெய்வந்த் மற்றும் நிம்மி உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுடனும் நடித்திருக்கிறார். 

ஷிரின்-பர்ஹத் மற்றும் ராஜ்-ஹாத் போன்ற வரலாற்றுத் திரைப்படங்களில் அக்காலத்தைய உடைகளில் தோன்றியும் வெற்றிபெற்றார். தற்காலத்திய கதாபாத்திரங்களிலும் அதே அளவிற்கு வெற்றிபெற்றார், கல் ஹமாரா ஹை என்ற சமூகத் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த இரட்டைக் கதாபாத்திரம் நினைவு கூறத்தக்கதாகும். மதுபாலா அதில் சிகரெட் பிடிக்கும் பெல்லா என்ற நடனக்காரியாகவும், மற்றும் அவருடைய மிகவும் பழமைவாத துறவு சகோதரியான மதுவாகவும் நடித்தார்.

மதுபாலா தன்னை அதிகமும் வெளியில் காட்டிக்கொள்ளாதவராக இருந்தார், திரைப்பட ஊடகம் அவருடைய சொந்த வாழ்க்கை மற்றும் காதல் உறவு குறித்து பலவாறாக யூகித்தபடி இருந்தது

மதுபாலாவின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியதை அடுத்து அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இளம் பருவத்திலிருந்த சிக்கலான இதய பிரச்னைக்கு அறுவை சிகிச்சை செய்தால் குணமாகிவிடுவோம் என்ற எண்ணம் அவருக்கு சற்று நம்பிக்கை அளித்தது. பரிசோதனைக்குப் பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மறுத்துவிட்டனர், அதன் பிறகு அவர் உயிர் பிழைப்பதிலுள்ள வாய்ப்பு மிகவும் குறைவானது என்று அவரை அமைதிப்படுத்தினர். அவர்களுடைய அறிவுரை அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்பதும், அதிக உழைப்பை தவிர்க்க வேண்டும் என்பதுமாக இருந்தது, அப்படியிருந்தால் அவர் மற்றொரு ஆண்டு உயிருடன் இருப்பார் என்று அவர்கள் யூகித்துக் கூறினர். அவருடைய மரணத்தைப் பற்றி தெரிந்துகொள்வது அச்சுறுத்தக்கூடியது, மதுபாலா இந்தியாவிற்குத் திரும்பினார், ஆனால் அந்த முன்னூகங்களை எதிர்த்து அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு வாழ்ந்தார்.

அவருடைய உடல்நிலையில் ஏற்பட்ட லேசான முன்னேற்றத்துடன் மதுபாலா சாலாக் என்ற திரைப்படத்தில் ராஜ் கபூருடன் மீண்டும் நடிக்க முயற்சி செய்தார். சினிமா ஊடகம் அவருடைய மறு வருகையை அதிகப்படியான ரசிகர்கள் எண்ணிக்கை மற்றும் விளம்பரத்தால் முன்னறிவித்தது. இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அப்போதும் அழகாயிருந்த ஆனால் வெளிறிப்போன சோகமான பார்வையுள்ள மதுபாலாவாகக் காட்டியது. இருப்பினும், சில நாட்கள் படப்பிடிப்பிற்குள்ளாகவே அவருடைய மோசமான உடல்நிலை மேலும் மோசமடைய காரணமானது என்பதுடன் அந்தப் படம் முடிக்கப்பட்டு வெளியிடப்படவே இல்லை.

நடிப்பு என்பது ஒரு தெளிவான தேர்வாக இல்லாத நிலையில், மதுபாலா தன்னுடைய கவனத்தை படம் தயாரிப்பதில் திருப்பினார். பர்ஸ் ஒளர் இஷ்க் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். இருப்பினும் இந்தப் படம் எடுக்கப்படவில்லை, முன் தயாரிப்பு நிலைகளில் மதுபாலா இறுதியில் தன்னுடைய உடல்நிலையால் வீழ்த்தப்பட்டார் என்பதோடு 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 தன்னுடைய பிறந்த நாளுக்கு பின்னர் வெகு விரைவிலேயே அவர் இறந்தார். அவர் அவருடைய குடும்பத்தினர் மற்றும் அவருடைய கணவர் கிஷோர் குமார் ஆகியோரால் சாண்டா குரூஸ் கல்லறையில் புதைக்கப்பட்டார்.

அவரது குறுகியகால வாழ்க்கையில் அவர் 70 படங்களில் நடித்திருந்தார். அவர் குறித்து பதிப்பிக்கப்பட்ட மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் மற்றும் பல்வேறு கட்டுரைகளில் அவர் மர்லின் மன்றோவோடு ஒப்பிடப்பட்டார் என்பதோடு அதேபோன்று இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு அடையாளத் தகுதியையும் பெற்றார். அவர் குணச்சித்திர பாத்திரங்கள் அல்லது துணைக் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் முன்னதாகவே இறந்துவிட்டதால், இதுநாள்வரை இந்திய திரையுலகில் அதிக நாள் நீடித்த மிகவும் புகழ்பெற்ற முன்னோடிகளுள் ஒருவராக இருக்கிறார் எனலாம். 

அவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காணக் கிடைக்கின்றன என்பதோடு மதுபாலாவின் பெரும்பாலான டிவிடி மாற்றப் பணிகள் அவருடைய ரசிகர்களிடம் புத்துயிர்ப்பை உருவாக்கச் செய்தது. பல்வேறு காட்சிப்படங்கள் மற்றும் ரசிகர்கள் உருவாக்கிய இறுதியஞ்சலி படங்கள் வலையொளி போன்ற பிரபலமான காணொளி வலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றன. 

வேறு எந்த பழம் ஹிந்தி நடிகைக்கும் இதுபோன்ற பெரிய அளவிற்கான காணொளிகள். காணொளிப் பகிர்வுத் தளங்களில் காணக்கிடைப்பதில்லை. இந்தியாவில், தெருவோர விற்பனையாளர்களும் கடைகளும் தற்கால ஹிந்தி சினிமா மின்மினிகளோடு அவருடைய கறுப்பு வெள்ளை புகைப்படங்களையும் விளம்பர சுவரொட்டிகளையும் விற்பனை செய்து வருகின்றனர்.

கடந்த பத்தாண்டில், மதுபாலாவைக் குறித்து வெளிவந்துள்ள சில வாழ்க்கைச் சரிதங்கள் மற்றும் கட்டுரைகள் முன்பு அவர் குறித்து அறியப்படாமல் இருந்த சொந்த வாழ்க்கை மற்றும் திரைப்பட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளிப்படுத்துகிறது. 

கடந்த ஆண்டில் மதுபாலா உருவம் பொதித்த நினைவுத் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. இந்த நடிகையின் உருவம் பொதித்து இந்திய அஞ்சல்துறையால் இந்த அஞ்சல்தலை தயாரிக்கப்பட்டது. இது உடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் மற்றும் மதுபாலா குடும்பத்தின் எஞ்சியிருக்கும் உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் நடிகர்கள் நிம்மி மற்றும் மனோஜ் குமார் ஆகியோரால் வெளியிடப்பட்டது. 

கூகுள் இன்று நடிகை மதுபாலா பிறந்த நாளை முன்னிட்டு டூடுல் என்கிற கோலஓவியம் வரைந்து கொண்டாடுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.