Show all

என்பேரு 'நந்தகோபாலன்குமரன்' மக்கள் என்ஜிகேன்னு கூப்பிடுவாங்க! அரசியல்வாதியாக சூர்யா; என்ஜிகே விளம்பரக் காணொளி வெளியானது

02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிற படத்திற்கு என்ஜிகே என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் நடித்திருக்கிறார். அந்தப் பெயரின் சுருக்கமே என்ஜிகேவாம்.

படத்தில் சூர்யா உழவராக இருந்து பின்னர் அரசியல்வாதியாக மாறுவதாக இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பதும், இந்தத் திரைப்படம், அரசியல் கலந்த திகில் படமாக உருவாகியிருக்கிறது என்பதும் தெரிய வருகிறது. இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விளம்பரக் காணொளி காதலர் நாளான இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விளம்பரக் காணொளி சமூக வலைதளத்தில் கசிந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில் படத்தின விளம்பரக் காணொளியைப் படக்குழு வெளியிட்டது. ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

'உன்ன மாதிரியான ஆளுங்க அரசியலுக்கு வந்தா இந்த ஊரு எவ்வளவு நல்லா இருக்கும்' 'கத்துக்குறேன் தலைவரே' என அரசியல் வாசனையுடனான வசனங்களுடன் வேளாண்மை, சமூக பிரச்சனையையும் படத்தில் சொல்ல வருவதாக தெரிகிறது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,063.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.