Show all

விஜய்சேதுபதிக்காக, புலியும் புலிக்குட்டியும் இணைகின்றன! ஆம் இளையராஜாவும், யுவன்ஷங்கர்ராஜாவும்

05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய்சேதுபதி நடிக்க விருக்கும் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்ஷங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கவுள்ளனர். விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான செக்க சிவந்த வானம், இமைக்கா நொடிகள், 96 ஆகிய மூன்று படங்களும் இமாலய வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய்சேதுபதி நடித்த, தென்மேற்கு பருவக்காற்று மற்றும் தர்மதுரை படங்களை இயக்கிய சீனுராமசாமி இந்தப் படத்தை இயக்குகிறார். முதன்முறையாக இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளனர். 

இந்தப் படத்தின் பூசை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பூசையில், இசைஞானி இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு கதைத்தலைவியாக நடிக்க பிக்பாஸ் பிரபலம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம். இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த, சூப்பர் டீலக்ஸ் மற்றும் சீதக்காதி ஆகிய படங்களின் வெளியீட்டு நாள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,948.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.