Show all

மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய் பெயர் பரிந்துரை! உலகளவில் சிறந்த நடிகருக்கான விருதுக்கு

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெர்சல் படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் மெர்சல். அட்லி இயக்கத்தில் விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் இணையாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா பகைவனாககவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார்.

iara awards 2018  என்று கூகுள் இணையத்தில் தேடி வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டாலும் ஒரே நேரத்தில் பலரும் வாக்களிப்பதற்கு தோதாக அந்த இணையத் தளம் வடிவமைக்கப் படவில்லை. வேலை செய்யவில்லை வேலை செய்யவில்லை என்று கூகுள் தேடலில் விடை கிடைக்கிறது. சலிப்படையாமல் பலமுறை தேடி யார் வாக்களித்து எப்படி விஜய்யை வெற்றி பெற வைக்க முடியும் என்று தெரிய வில்லை. பார்க்கலாம் எப்படி வாக்கெடுப்பு நடக்கிறது? யார் விருதைப் பெறப் போகிறார்கள் என்பதை.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.