Show all

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் படிப்புக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து வரிசை எண் வழங்கி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு இயங்கலையாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் புதன் கிழமை தொடங்கி 5 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு என ஏற்படுத்தப்பட்ட மையங்களில் சென்று மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

முதற்கட்டமாக 190 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு வரும் புதன் கிழமை முதல் முதல் அடுத்த ஞாயிறு வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் இன்று முதல் செவ்வாய் வரை இயங்கலை மூலம் கட்டணம் செலுத்தலாம்.

இதேபோல் 175 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு அடுத்த திங்கள் முதல் தொடங்கி செவ்வாய், புதன், வியாழன் என்று வெள்ளி வரை கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க தகுதி வாய்ந்த மாணவர்கள் வரும் புதன் முதல் கட்டணம் செலுத்தலாம். 

150 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும். வரும் 30-ம் தேதி முதல் இயங்கலையில் கட்டணம் செலுத்தலாம். இதேபோல் 125 மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 9 முதல் 13ம் தேதி வரையில் கலந்தாய்வு நடக்கிறது. இவர்கள் ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் இயங்கலையில் கட்டணம் செலுத்தலாம். 

இதர மாணவர்களுக்கு ஆகஸ்ட் 14 முதல் 19-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9ம் தேதி முதல் கட்டணம் செலுத்தலாம்.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். #TNEA2018 #BECounselling2018 #AnnaUniversity

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,855. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.