Show all

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை?

மனிதன் எவ்வளவோ கண்டுபிடிக்கிறான், ஏன் இறக்காமல் இருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5125. 

இந்த வினாவில் காலமாகாமல் இருப்பதை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கேட்டிருக்க வேண்டும். ஏனென்றால் இறத்தல் என்பது முடிவானது அல்ல. இறத்தலில் மீண்டும் மீண்டும் பெருவெடிவரை, பிறப்பு நிகழ்கிறது. காலமாவதுதான் முடிவானது. 

இப்படிச் சொல்லும்போது, அதெப்படி என்கிற வினா எழும். அதற்கு முதலாவதாக 'இறத்தல், காலமாதல் என்கிற பொருள் பொதிந்த சொற்களில்! உடல் இறையாகிறது. உயிர் காலமாகிறது என்று நிறுவியுள்ளனர் தமிழ் முன்னோர்' என்கிற தலைப்பை கட்டாயம் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

இடமும் காலமும் ஒன்றுக்கொன்று எதிர்வினையாற்றக்கூடியது. இடம் தான்தோன்றி இயக்கம் அற்றது. காலம் தான்தோன்றி இயக்கம் உடையது. என்பதையெல்லாம் புரிந்து கொள்வதற்கு முதலாவதாக, 'கடவுள்- ஆண்பாலோ, பெண்பாலோ அல்ல் ஒன்றன்பால்' என்கிற தலைப்பையும் தெளிவாகப் புரிந்து கொண்டிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஒவ்வொரு உயிரியும் ஒரு கூட்டியக்கம் ஆகும். கூட்டியக்கம் இயக்கமின்மைக்கு எதிராக முன்னெடுக்கப்படுவதால் அதற்கு காலக்கெடு அமைகிறது. ஒவ்வொரு உயிரியும் இடத்தின் (கடவுள்) கட்டுப்பாட்டில் இருந்துகொண்டிருக்கிறது. அதனால் உயிரிகளைக் கடவுள் அந்தக் காலக்கெடுவிற்கு முயக்கும்.

மனிதனால் மனிதக் கட்டுப்பாட்டில்தான் கருவிகளை உருவாக்க முடியமேயொழிய, இயக்கமின்மை என்கிற இடத்தின் (கடவுள்) கட்டுப்பாட்டில் ஒரு கூட்டியக்கத்தை உருவாக்க முடியாது. 

மனிதன் உருவாக்கிய கருவிகளை மனிதன் எத்தனை காலத்திற்கும் பழுது பார்க்க முடியும். ஆனால் எத்தனைதான், உயிரிகளில், உறுப்பு மாற்றங்களையெல்லாம் முன்னெடுத்தாலும்கூட மனிதனால் உயிர் காலமாவதைத் தடுத்து நிறுத்தவியலாது. 

உயிரிகள் காலமாவது என்பது அதன் கூட்டியக்க எண்ணிக்கையே அதன் இயல்பு மாற்றத்திற்கு அடிப்படை என்பதும் உயிரிகள், இடத்தின் (கடவுளின்) கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருப்பன என்பதும் காரணம் ஆகும்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,655.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.