Show all

யுடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் ஈடுபட்ட திடீர் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம்

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் பிரபல சமூக வலைதளமான வலையொளி தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயம் அடைந்ததனர். சம்பவ இடத்திற்கு சான்பருனோ நகர காவல்துறையினர் விரைந்து பாதுகாப்பபணியில் ஈடுபட்டனர். இந்த துப்பாக்கிச்சூடுக்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாக தற்போது வரை தெரியவில்லை என்று உள்ளூர் காவல்துறையினர் தெரிவித்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.