Show all

குறளும் குமரிநாடன் உரையும் வரிசையில்! குறள் எண்: 004 அதிகாரம்: கடவுள் வாழ்த்து

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 

குமரிநாடன் உரை:
வேண்டாமைகளைத் தரவியலாது, வேண்டுதலைக் கொடுக்க முடிகிற இருப்பு ஆகிய கடவுள்கூறுதெய்வம் தமிழ் என்று, புரிந்து கொண்டவர்களுக்கு, எக்காலத்திலும் துன்பம் இல்லை.

விளக்கம்:
'வேண்டுதல்' என்கிற சொல்லுக்கு- வேண்டினால் கொடுக்க முடிகிற இருப்பு ஆகும் தமிழ்என்கிற கடவுள்கூறு தெய்வம் என்பது பொருள்.

'வேண்டாமை இலான்' என்கிற இரண்டு சொற்களுக்கு- வேண்டாமைகளைக் கொடுக்க முடியாத இல்லாமையும் ஆகும் தமிழ்என்கிற கடவுள்கூறு தெய்வம் என்பது பொருள்.

'அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல' என்கிற ஐந்து சொற்களுக்கு-  வேண்டினால் கொடுக்க முடிகிற இருப்பு தமிழ் என்கிற கடவுள்கூறு தெய்வம், என்று புரிந்து கொண்டு வேண்டினால் இன்பம் மட்டுமே கிடைக்கும் என்பது பொருள் ஆகும். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.