தமிழ்முன்னோர் நிறுவியுள்ள, 'முதனெப்படுவது இடமும் காலமும்' என்கிற இருமெய் கோட்பாட்டின் அடிப்படையில். அறிவையும் இடத்தின்கூறு ஆகவும், காலத்தின் கூறு ஆகவும் வகைப்படுத்;தி ஆயும்போது, இடத்தின்கூறு ஆன அறிவுக்கு ஆழஅறிவு என்றும், காலத்தின்கூறு ஆன அறிவுக்கு அகலஅறிவு என்றும் தலைப்பிடலாம் என்று தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது: அ. புரிந்து கொள்வது ஆழஅறிவு. அறிந்துகொள்வது அகலஅறிவு. ஆ. ஆழஅறிவை சிறப்பு அறிவு என்று புரிந்து கொள்ளலாம். அகலஅறிவை பொதுஅறிவு என்று சொல்லலாம். இ. தொழில், வணிகம், வேளாண்மை, தனித்திறன் முனைவது ஆழஅறிவு ஆகும். மேலாண்மைக் கூலித்தளத்தல் இயங்குவதற்கு அகலஅறிவு கட்டாயப்படுத்தப்படுகிறது. ஈ. நிலைத்த வாழ்க்கையில் ஆழஅறிவு வளர்கிறது. நடோடி வாழ்க்கையில் அகல அறிவு வளர்கிறது. உ. எந்த ஒன்றின் அனைத்துக் கோணத்தையும் தொடர்ச்சியாகஅறிதல், புரிதல் என்கிற ஆழஅறிவு ஆகிறது. பலவற்றின் ஒற்றைக் கோணங்களை அறிந்திருத்தல் அகல அறிவு ஆகிறது. ஊ. உலகின் பலநாடுகள் கல்வியில் ஆழஅறிவைப் பேணியிருக்கிறது. இந்தியாவின் கல்வியில் அகலஅறிவு வேண்டப்படுகிறது. எ. சமைப்பது, நீந்துவது, வண்டியோட்டுவது, ஓவியம் வரைவது, சிற்பம் செதுக்குவது, பாடுவது, பேசுவது போன்றவை ஆழஅறிவின் வெளிப்பாடுகள் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவது அகலஅறிவின் அடையாளங்கள். ஏ. ஆழஅறிவை எளிதாக அடையாளப்படுத்தலாம். அகலஅறிவை அடையாளப்படுத்த சான்றிதழ்கள் தேர்வுகள் கட்டாயம் ஆகின்றன. ஐ. ஆழஅறிவு எப்போதும் மறக்கவே மறக்காது. அகலஅறிவு புழங்காமல் இருந்தால் மறந்து போகும். ஒ. பொதுவாக, பெண்கள் ஆழஅறிவில் மிளிர்கிறார்கள். பொதுவாக ஆண்கள் அகலஅறிவில் போட்டிபோடுகிறார்கள். ஓ. ஆழஅறிவு ஒவ்வொரு மனிதனின் உடைமை ஆகிறது. அகலஅறிவு அடுத்தவனிடம் உடைமையை ஒப்படைத்துவிட்டு உரிமைக்கு போராடுவது ஆகும். ஓள. ஆழஅறிவில் பண்பு வளர்கிறது. அகல அறிவில் ஆதிக்கம் பேணப்படுகிறது ஃ சொந்த மொழியைக் கொண்டாடுவது ஆழஅறிவு. அடுத்த மொழியையோ, அடுத்த மொழிகளையோ பாராட்டி மகிழ்வது அகலஅறிவு
1.கிழமை: புதியம்கிழமை
2.நாள்: 06
3.மாதம்: மாசி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872624



