Show all

தமிழறிஞர்.மந்திரம்கல்வியாளர்.குமரிநாடன் ஆற்றிய தலைமையுரை

சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுத்த, நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நான் ஆற்றிய தலைமையுரையை கட்டுரையாக்கியுள்ளேன்.

ஐம்பொழுது:
1.கிழமை: கருக்கரிவாள்கிழமை
2.நாள்: 15
3.மாதம்: தை
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872604

சான்றோர்தளமும், பன்னாட்டு, பயன்பாட்டு தமிழ்க்குழுமமும் இணைந்து, கூகுள் குவியத்தில் முன்னெடுக்கும் இந்த நூற்றி பதிமூன்றாவது மின்நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு, தலைமையுரை ஆற்றிட என்னை செல்பேசியில் அழைத்து பொறுப்பு அளித்த, சான்றோர் தளத்தின் ஆளுமைகள் நீர்மேலாண்மைப்பெறிஞர் அமிர்தம் பீட்டர்ராசனுக்கும், பாவலர்.மன்னர்மன்னன் அவர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

நூலாசிரியர்: தமிழறிஞர்.மந்திரம்ஆசிரியர்.இளந்தமிழ்வேள்,
நூல்திறனாய்வாளர்: கவிஞர்.மயிலாடுதுறை.ஆனந்த்முத்தையா,
தொடக்கவுரை: பொறியியல் முனைவர். பாலமுருகன்
வாழ்த்துரை: சென்னை மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைப்  
                             பேராசிரியர்.முனைவர்.வெற்றிநிலவன் 
                             கவிஞர்.வெணான்சியஸ்
நிகழ்ச்சிநெறியாளுகை: கவிஞர்.வடலூர் ஜெகன்
தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு: பாவலர்.தமிழியலன். 
ஆகியோருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்து என்னுடைய உரையைத் தொடங்குகிறேன்.

இந்த அரங்கத்தில் நாம் திறாய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள மின்நூல்: இளந்தமிழ்வேள் சிறுகதைகள் ஆகும். இந்த நூல் இருபது சிறுகதைகளைக் கொண்டுள்ளது. 

தனிமனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அனைத்துவகை முன்னேற்றத்திற்குமானது என்று, தெளிவும் உறுதியுமாக தமிழ்முன்னோர் நிறுவிய, கணியம் மற்றும் மந்திரம் வெடிமருந்துகளால் உருவாக்கப்பட்டதும், வெடித்து உங்கள் மனதிற்குள் தெளிவைத் தூண்டுவதற்குமான, இருபது கொள்ளுப்பட்டாசுகளின் சிறுபெட்டி என்று சொல்லத்தகுந்தது ஆகும், இருபது சிறுகதைகளைக் கொண்டுள்ள இந்த நூல்.

கணியம் என்பது ஒவ்வொரு தாய்மொழிகளின் எண்களில் பொதிந்த கலைநுட்பம் ஆகும். மந்திரம் என்பது ஒவ்வொரு தாய்மொழிகளின் எழுத்துக்களில் பொதிந்த கலைநுட்பம் ஆகும். என்று, 3500 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று இந்தியா என்று வழங்கப்படுகிற, தமிழ்மட்டுமே புழங்கியிருந்த நாவலந்தேயத்தில், வாழ்ந்திருந்த தமிழ்முன்னோர் நிறுவிய உண்மை ஆகும்.

நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்கு ஆற்றல்மூலங்களை, நான்மறைகள் அல்லது இறை என்று நிறுவியிருந்தனர் தமிழ்முன்னோர். 

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்மறைகளை விசும்பு என்கிற ஐந்தாவது ஆற்றல் மூலத்தோடு இணைத்துப் பேசுகிறபோது, அவற்றுக்கு ஐந்திரம் என்கிற தலைப்பைப் பொருத்தியிருந்தனர் தமிழ்முன்னோர்.

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு ஆற்றல்மூலங்களும் தான்தோன்றி இயக்கமும் எல்லையும் உடையன. விசும்பு என்கிற முயக்கஆற்றல், தான்தோன்றி இயக்கமும் எல்லையும் இல்லாத வெளியின் மூன்றாவது நிலை ஆகும். வெளியின் இரண்டாவது நிலை விண்வெளி. நம்மை முயக்க அணியமான, வெளியின் மூன்றாவது நிலையான விசும்பு, நம்மைக் கடந்தும் நமக்கு உள்ளும் அமைகிற காரணம் பற்றி அதை கடவுள் என்கிற ஆற்றல்மூலம் என்று தெளிந்தனர் தமிழ்முன்னோர்.

முதலெனப்படுவது இடமும் காலமும் என்று தொல்காப்பியம் எடுத்தாண்ட வகைக்கு, தமிழ்முன்னோர் நிறுவியிருந்த இடம் வெளி ஆகும். அந்த வெளியில் இயங்கும் நான்மறைகளும் நான்மறைகளின் தொடர்ச்சியும் ஆன நீங்கள் நான் வரையிலும் அனைத்தும் அனைவரும் காலம் ஆவோம்.

நிலம், நீர், தீ, காற்று- அவைகளால் ஆன கோள்கள், மண்ணில் நிற்கிற மரம்செடி கொடிகள், நீங்கள் நான் உள்ளிட்ட பயணிக்கிற உயிரிகள் அனைவரும் இயக்கமற்ற வெளியில் இயங்கி, அதை நம்மால் இயக்கம்பெற்றவிண்வெளியாக்கி, அது விசும்பு என்று, நம்மிடம் இருந்து இயக்கம்பெற்ற வகைக்கு, நம்மை முயக்குவதற்கு நாம் காரணம் ஆகிறோம். அதாவது நம்முடைய தலையெழுத்தை, 'தீதும்நன்றும்பிறர்தரவாரா' என்று நாம்தாம் எழுதிக்கொள்கிறோம். 

இப்படி, இந்த, நம்முடைய தலையெழுத்தை, நாமே எழுதிக்கொள்கிற எழுதுதல் நடவடிக்கையின் முழுமையான புழக்கத்திற்கானது, அவரவர் தாய்மொழியின் எண்ணும் எழுத்தும் ஆகும்.

அவரவருடைய வாழ்க்கை, அவரவரது தாய்மொழியில் அவரவரும் முன்னெடுக்கும் கணியத்தாலும், மந்திரத்தாலும் சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது என்பது தமிழ்முன்னோர் நிறுவிய உண்மை.

ஈழத்தில் சிங்களவர் பேராளுமைக்கும், ஒட்டுமொத்த இந்தியாவின் மீதான பிராமணியர் பேரளுமைக்கும், அவர்களுக்குக் கிடைத்த கணியமும் மந்திரமும் இரண்டு தமிழச்சிகளின் கொடையே என்கிற ஒரு பெரிய வெடியை இங்கே இப்போது நான் வெடிக்கச் செய்கிறேன்.

எழுதாக்கிளவியும், தந்தையர் மொழியுமாக ஈழத்தில் நுழைந்த சிங்கள மொழிக்கு, தாய்மொழித் தகுதியும், எழுத்தும், வாழ்க்கையும் வழங்கிய தமிழச்சி கூவேணி ஆவாள். அந்தக் கூவேணியை இன்றைக்கும் சிங்கள இனம் முதல்தாயாகவும் இனக்குலதெய்வமாகவும் கொண்டாடி, கூவேணி, தன்தமிழ்மொழி வழியாக, சிங்களத்திற்கு வழங்கிய கணியத்தையும், மந்திரத்தையும் சிங்கள இனம்கொண்டாடியிருக்கிற காரணமாக, சிங்களஇனம் ஆதிக்க இனமாக சாதித்து வருகிறது.

எழுதாக்கிளவியும், தந்தையர் மொழியுமாக வடபுல நாவலந்தேய இந்தியாவில் நுழைந்த சமஸ்கிருத மொழிக்கு, தாய்மொழித் தகுதியும், எழுத்தும், வாழ்க்கையும் வழங்கிய தமிழச்சி பாணினி ஆவாள். அந்தப் பாணினியை இன்றைக்கும் பிராமணிய இனம் ஆண்வடிவில் முதல்தந்தையாகவும் குலதெய்வமாகவும் கொண்டாடி, பாணினி தன்தமிழ்மொழி வழியாக பிராமணியத்திற்கு வழங்கிய கணியத்தையும், மந்திரத்தையும் பிரமணிய இனம்கொண்டாடியிருக்கிற காரணமாக, பிராமணியஇனம் இந்தியாவின் ஆதிக்க இனமாக சாதித்து வருகிறது.

தமிழ்நாட்டில் தெலுங்கு மொழிபேசுவோர் பேரளவாக ஆதிக்கத்தில் இருப்பதற்குக் காரணமும் தெலுங்குமக்களின் இதே வகையான முயற்சியே ஆகும். 

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம், திராவிடம் போன்றவற்றை ஆதரித்தாலும், எதிர்த்தாலும், அந்த ஆதரவுக்கும், அந்த எதிர்ப்பிற்கும் அவைகளே அடிப்படைகள் என்கிற காரணம் பற்றி, ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் அவைகளை மட்டுமே செழுமைப்படுத்தும். எதிர்கிறவர்களை ஒருபோதும் செழுமைப்படுத்தாது. எதிர்கிறவர்கள் தங்களைச் செழுமைப்படுத்திக் கொள்ள தங்கள் இயலைப் பேரளவாக கட்டுமானம் செய்யவேண்டும். 

தமிழ்முன்னோர் நிறுவிய கணியம் மற்றும் மந்திரத்தை பிராமணரும், சிங்களவரும் கொண்டாடி ஆதிக்கத்தில் நிலைப்பதும் அதை உலகினரும் வியந்து போற்றுவதும் எளிதாக பலஆயிரம் ஆண்டுகளாக பயன்தருகிற நிலையில் நம்முடைய கணியம் மந்திரத்தை நம்முடைய தாய்மொழியில் முயலாமல், நாம்அயல்சார்பில் முயன்று கொண்டிருக்கிற ஆங்கிலவழிக் கல்வியோ, ஒன்றியப் பாடத்திட்டக்கல்வியோ ஒருபோதும் நம்மை உயர்த்த முடியவே முடியாது.

பிராமணிய இனம் உருவாக்கிய ஒரேயொரு தெய்வம் பிரம்மா மட்டுமே. பிரம்மா என்பதற்கு பேரம்மா (பெரிய அம்மா) என்றே பொருள். பேரம்மா என்கிற பெண்தெய்வத்தையும் பிரம்மா என்கிற ஆணாகக் கொண்டாகிற கலாச்சாரம் பிராமணர்களுடையது என்கிற காரணம் பற்றியே பாணனின் பெண்பால்;; ஆகிய பாணத்தி அல்லது பாணினியை ஆணாகப் போற்றிக்கொள்கின்றனர். 

தமிழச்சிபாணினி, சமஸ்கிருதமொழியில், தமிழ்எழுத்தில், எழுதிய கணியம்மந்திரம் நூல், 'சமஸ்கிருத எண்எழுத்துஇயம்' என்பதே. அதில், 'எண்எழுத்துஇயம்' என்பதை மட்டும், அஷ்டாத்தியாயி என்று சமஸ்கிருதப்படுத்திக் கொண்டனர் பிராமணர். 

அஷ்டா என்றால் எண். அத்யா என்றால் எழுத்து. அத்தியாபக் என்றால் ஆசிரியர் என்பனவெல்லாம் பாணினி எழுதியது அஷ்டாத்யாயி அல்ல.  எண்எழுத்து இயமே என்று நிறுவதற்கான சமஸ்கிருத வழக்குகள்.

இளந்தமிழ்வேளும் குமரிநாடனும் ஆகிய நாங்கள் இருவரும் எங்களின் பேரளவான சொந்தப் பாடாற்றல்கள் மூலமும், நாற்பதுக்கு மேலான ஆண்டுகள் தொடர்ந்து கலந்துரையாடியதன் மூலமும், பெற்றபேறே, 'தனிமனிதர்களின் மகிழ்ச்சிக்கும், அனைத்துவகை முன்னேற்றத்திற்கும் தமிழ்முன்னோர் நிறுவியது கணியமும் மந்திரமும்' என்கிற கண்டுபிடிப்பு ஆகும்.

தமிழ்வளர்ச்சிக்கு தனிமனிதர்களும், தலைவர்களும், பல்வேறு அமைப்புகளும் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பாடாற்றி வருகிறபோதும், அது தனிமனிதர்களை முன்னேற்றும் வகைமைக்கானதாக அமையவில்லை என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை ஆகும்.

தனிமனிதர்களின் முன்னேற்றம் தாய்மொழியின் எண்ணின் நுட்பம் ஆகிய கணியத்தாலும், எழுத்தின் நுட்பம் ஆகிய மந்திரத்தாலும் மட்டுமே சாத்தியம் என்பதைத் தெரிவிக்கும் நோக்கத்திற்கான சிறுமுன்னெடுப்பாக வெளியிடப்படுகிறது இளந்தமிழ்வேள் சிறுகதைகள்.

அவரின் இந்தச் சிறுமுயற்சியை வாழ்த்தி, எதிர்காலத்தில் பேரளவாக கணியம் மற்றும் மந்திரத்தைப் பரப்பி, பேரளவானவர்களைச் சாதிக்கச்செய்ய, பேரளவாக அவர் எழுதவும், சான்றோர்தளம் போன்ற மன்றங்களில் கலந்துகொள்ளவும் வேண்டும் என்று வாழ்த்தி நிறைகிறேன்.
வாழ்த்துக்கள் இளந்தமிழ்வேள் ஐயா!
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.