29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐநாவின் 9வது ஆண்டு அறிக்கையை அதன் தலைவர் ஆன்டானியோ வெளியிட்டுள்ளார். இதில், மனிதஉரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள 38 நாடுகளில் சட்டம், அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவை சமூக ஆர்வலர்களை பழிவாங்க தவறாக பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, அல்ஜீரியா, பக்ரைன், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், ஜப்பான், மெக்சிகோ, மொராகோ, மியான்மர், பாகிஸ்தான், ருவண்டா, சவுதி அரேபியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பகிஸ்தான், வெனின்சுலா போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,910.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



