கடவுளில் இயங்குவது என்றால் என்ன? எப்படி? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது: 1.கிழமை: கருக்கரிவாள் கிழமை கடவுளில் இயங்குவது தொடர்ச்சியான வெற்றிகளுக்கானது. (இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை என்பது தமிழ்முன்னோர் நிறுவிய உண்மை) வெளிதான் கடவுள், என்பது தமிழியல் நிறுவிய உண்மை. தனித்த ஒன்றிலோ, பலவற்றிலோ, நீங்கள் பேரளவாகப் புலமை பெற்றிருக்கிற, பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் போன்ற, அயல் சார்பில் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிற எந்த வேறுவேறுகளையும் இங்கே பொருத்தி குழம்ப வேண்டாம். கடவுளில் இயங்குகிற ஞாயிறு திங்கள் செவ்வாய் புதியம் வியாழம் வெள்ளி கருக்கரிவாள் என்கிற கோள்கள் அனைத்தும் சீரான இயக்கத்தை காலம் காலமாகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றன. இப்படிக் கடமையில் இயங்குவதை மாண்புகளைக் கொண்டாடுவது என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் தெளிவு படுத்தியுள்ளனர். கடவுளில் இயங்குவது தொடர்ச்சியான வெற்றிகளுக்கானது. என்பதை, மனிதனில் இயங்குவது துண்டு துண்டான வெற்றிகளுக்கானது. (இயக்கத்தின் மீது இயங்குவது தாறுமாறு இயக்கமும் இயக்கத்தடையும் என்பது தமிழ்முன்னோர் நிறுவிய உண்மை) குற்றத்தைக் கொண்டாடி இருப்பது அனைத்தும் மனிதனில் இயங்குகிற போக்கு ஆகும். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது தமிழியல் சொலவடை. சுற்றம் என்பது சொந்த பந்தங்கள் மட்டுமல்ல நமது உடைமைகள் அனைத்தும் ஆகும். ஒவ்வொரு குற்றத்தை நம் மனதில் தூவும் போதும், உடைமை என்கிற நமது தோட்டத்தில் விதைத்திருக்கிற ஒவ்வொரு செடியும் கருகி சாய்கிறது. குற்றம் என்பது உரம் அல்ல. குற்றம் என்பது உயிர்க் கொல்லி.
2.நாள்: 02
3.மாதம்: வைகாசி
4.தமிழ்த்தொடராண்டு: 5128
5.தமிழ்த்தொடர்நாள்: 1872711
கடவுள் எல்லையற்றது என்பதால்.
கடவுள் இயக்கமின்மை என்பதால்.
மாண்புகளைக் கொண்டாடி இருப்பது தொடர்ச்சியான வெற்றிகளுக்கானது என்று புரிந்து கொள்ளுங்கள்.
மனிதன் எல்லை உடையவன் என்பதால்.
மனிதன் தான்தோன்றி இயக்கம் என்பதால்.
மாண்புகளைக் கொண்டாடி எல்லையில்லாத வெற்றிகளைக் குவித்திருக்க வாழ்த்துக்கள்.



