Show all

மகாராஷ்டிரா அரசின் சலுகை மழையில், தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகம்! பாசம் பொங்கி வளிகிறது

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்க மோடி அரசிடம் அனுமதிபெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசின் சிறந்த கல்வி நிறுவனம் என்று நடுவண் மனிதவளத்துறை தேர்வு  செய்தது சர்ச்சையானது.  

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சரவை, ரிலையன்ஸ் பல்கலைக்கழகம் தொடங்குவதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தவும், அந்த நிலத்தைப் பதிவுசெய்வதற்கான பதிவுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உட்பட, பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனம், பல்கலைக்கழகத்தை வேளாண் நிலத்தில் அமைத்துக்கொள்ள அனுமதி கோரியிருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள மகாராஷ்டிரா அமைச்சரவை, பல்கலைக்கழகம் அமைக்க உள்ள பகுதியை ஒருங்கிணைந்த நகரத் திட்டமிடல் பகுதியாக அறிவிக்கவும் முடிவுசெய்துள்ளது. பல்கலைக்கழகத்தைத் தொடங்க, ஊரகப் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் 500 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 

இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர அரசின் உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே, எங்கள் மாநிலத்தில் சர்வதேச அளவில் உயர்தரமான பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கு நாங்கள் அனைத்து விதமான உதவியும் செய்யத் தயாராக உள்ளோம். நில ஒதுக்கீடு மற்றும் இதர பணிகளை ஒருங்கிணைக்க வருவாய்த் துறையின் உதவியுடன் இணைந்து செயல்பட குழுக்களை அமைத்துள்ளோம் என்றார்.

அது சரி ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது மட்டும் பாசம் பொங்கி வளிவது ஏன்?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,910.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.