Show all

உங்களுக்கான நன்மை தரும் கடவுளை நீங்கள்தான் உருவாக்கி கொள்ள முடியும்

நீங்கள் உண்மையில் நல்லவரா? நீங்கள் நல்லவர் என்றால் உங்களுக்கான நன்மை தரும் கடவுளை நீங்களே உருவாக்கி கொள்ள முடியும் என்கிற விளக்கத்திற்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

 

ஐம்பொழுது:
1.கிழமை: திங்கட் கிழமை
2.நாள்: 04
3.மாதம்: வைகாசி
4.தமிழ்த்தொடராண்டு: 5128
5.தமிழ்த்தொடர்நாள்: 1872713

நல்லவர்:
யாரையும் கெட்டவராகப் புரிந்துகொள்ள முடியாதவர்.
 

கெட்டவர்:
யாரையும் நல்லவராகப் புரிந்து கொள்ள முடியாதவர்.
 

கடவுள்:
ஒவ்வொருவருக்கும் கடவுள் தனித்தனியானது.

எந்தக்கடவுள்:
ஒவ்வொரும் தனக்ககான நன்மைதரும் கடவுளையோ, தீமை மட்டுமே தரும் கடவுளையோ அவரவர் மட்டுமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

நன்மைதரும் கடவுள்:
யாரையும் கெட்டவராகப் புரிந்துகொள்ள முடியாதவர், தனக்கான நன்மைதரும் கடவுளை உருவாக்குகிறார்.

தீமை மட்டுமே தரும் கடவுள்:
யாரையும் நல்லவராகப் புரிந்து கொள்ள முடியாதவர் தனக்கான தீமைமட்டுமே தருகிற கடவுளை உருவாக்குகிறார்.

எங்கே அமைகிறது மகிழ்சிக் கடவுள்:
நீங்கள் உருவாக்கிக்கொண்ட உங்களுக்கான நன்மைதரும் முயக்கக்கடவுள், புன்னகை தவளும் உங்கள் முகத்தில் மகிழ்ச்சியாகத் தொற்றி, 180 பாகை விரிவிற்கும், முன்னிலையில் அமைந்தவர் எவ்வளவு தூரத்தில் உங்கள் மகிழ்ச்சியை உணர முடிகிறதோ அவ்வளவு தூரத்திற்கும் உங்கள் முகத்தின் மகிழ்ச்சியாக கடவுள் உங்களோடு பயணிக்கிறது. 

எங்கே அமைகிறது கவலைக்கடவுள்: 
நீங்கள் உருவாக்கிக்கொண்ட உங்களுக்கான தீமைமட்டுமே தரும் முயக்கக்கடவுள், துவண்டு தொங்கிய உங்கள் முகத்தில் கவலையாக ஊசலாடி, 180 பாகை விரிவிற்கும், முன்னிலையில் அமைந்தவர் எவ்வளவு தூரத்தில் உங்கள் கவலையை உணர முடிகிறதோ அவ்வளவு தூரத்திற்கும் உங்கள் முகத்தின் கவலையாக கடவுள் உங்களோடு பயணிக்கிறது.  

விளக்கம்: 
ஏன்? எப்படி? என்பதை தமிழ் முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் தெளிவாக விளக்குகிறது.
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.