நரேந்திர மோடி அவர்களே! நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்தப் பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று காணொளி வெளியிட்டதால், பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. 29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பிரபல பாகிஸ்தான் பாடகி ரபி பிர்ஸாடா என்பவர், நரேந்திர மோடியை கொல்வதாக பாம்பு, முதலைகளை வைத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகி ரபி பிர்ஸாடா. தனது கீச்சுப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில், கை நிறைய நஞ்சு பாம்புகளை அவர் வைத்துள்ளார். தரையில் சில மலைப்பாம்புகளும், ஒரு முதலையும் இருக்கிறது. அந்தப் பாம்புகள், முதலைகளோடு விளையாடும் அவர், நரேந்திர மோடி அவர்களே நீங்கள் காஷ்மீர் மக்களை கொடுமைப்படுத்தி வருகிறீர்கள். இந்த பாம்புகள், முதலைகள் எல்லாம் உங்களுக்காக நான் வைத்திருக்கும் பரிசு. இறப்பதற்கு தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். இந்தக் காணொளி வெளியானதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தது, வீட்டில் மிருகங்களை வைத்திருந்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது லாகூரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப் படலாம் என்று அறியமுடிகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,276.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.