Show all

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட நினைப்பது, பெயர் அல்ல- அடிமைஎண். என்பதை அறிவீர்களா!

உங்கள் பிள்ளைக்கு, அடிமைஎண் சூட்டுவதைத் தவிர்த்து, பெயரைச் கூட்டி கடவுளில் உங்கள் பிள்ளைக்குச் சொந்த இடத்தை உருவாக்குங்கள் என்கிற அறிவுறுத்தலுக்காக உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

 

ஐம்பொழுது:

1.கிழமை: வெள்ளிக்கிழமை
2.நாள்: 04
3.மாதம்: சித்திரை
4.தமிழ்த்தொடராண்டு: 5128
5.தமிழ்த்தொடர்நாள்: 1872682

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், அமெரிக்கஇயம், உலகமதங்கள், மார்க்சியம் என்பன உலகினர் பேணியிருக்கும் வாழ்க்கை முறைகள்.

நாம் பேண வேண்டிய வாழ்க்கைமுறை தமிழியல்.

கணியன் பூங்குன்றனார் பேணியிருந்தது தமிழியல் என்று அவரின் பெயராலும், நமக்கு இன்றும் கிடைக்கிற, யாதும்ஊரே யாவரும் கேளிர் என்று தொடங்கும் அவரின் புறநானூற்றுப் பாடலாலும் அறிய முடிகிறது.

திருவள்ளுவர் (மெய்மொழியார்) பேணியிருந்தது தமிழியல் என்று அவரின் பெயராலும், அவர் இயற்றிச் சென்ற திருக்குறளாலும் நாம்மால் உணர முடிகிறது.

நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட நினைக்கிற பெயரும், உங்கள் பெற்றோர் உங்களுக்குச் சூட்டிய பெயரும், உங்களைப் பிராமணியராகவோ, அராபியராகவோ, ஐரோப்பயிராகவோ, அமெரிக்கஇயராகவோ, உலகமதங்களில் ஏதோ ஒரு மதத்தைச் சார்ந்தவராகவோ, மார்க்சியராகவோ அடையாளப்படுத்துகிறது.

ஆனால், பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், அமெரிக்கஇயம், உலகமதங்கள், மார்க்சியம் உள்ளிட்ட எந்த வாழ்க்கை முறையும், உங்களை, அந்த வாழ்க்கை முறைக்குச் சொந்தகாரன் என்று ஏற்காது.

ஓ தமிழினத்தில் இருந்து வந்த அடிமையா? என்றே வியந்து பார்க்கும்.

உங்கள் சீரான இயக்கத்திற்கான, இயக்கமின்மையாக அருட் பாடாற்றி வருகின்ற கடவுளும், உங்களைப் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், அமெரிக்கஇயம், உலகமதங்கள், மார்க்சியம் உள்ளிட்ட அயல்களின் வரிசையில், கடைசியாக நிறுத்தி, அந்தந்த இனத்தவர்களின், அனைத்துப் பாடாற்றல்களுக்கும் வருமானத்தையும், உங்களின் அனைத்துப் பாடாற்றல்களுக்கும் கூலியைபும் வழங்கும். 

வருமானம் என்பது: சொந்தமொழி, செந்த இயல், தொழில், வணிகம், வேளாண்மை, தனித்திறன் ஆகிய உடைமைபோற்றும் தளங்களுக்கான புலமை ஆதாயம் இணைந்தது. 

கூலி என்பது: சொந்தமொழி, செந்த இயல், தொழில், வணிகம், வேளாண்மை, தனித்திறன் ஆகிய உடைமைபோற்றியிருக்கும் அயல் இனத்திற்கு உரிய புலமை ஆதாயம் கழிக்கப்பட்டு, உரிமையாக வழங்கப்படுகிற, எஞ்சிய இருப்பு ஆகும்.

இந்த வகைக்கு கடவுள் உங்களை அடையாளம் காண நீங்கள் கடவுளுக்குக் கொடுப்பது உங்கள் பெயரைத்தான்.

பெயர் என்பது: சும்மாவோ, ஏனோதானோவோ அல்ல. 

பெயர்: உங்கள் உள்ளெண்ணிக்கையின் அடையாளம். இயற்கையின் அனைத்தில், ஒவ்வொன்றும் வேறுவேறான இயல்புடையதாக இருப்பதற்கு காரணம், அது அது கொண்டிருக்கிற உள்ளெண்ணிக்கையே என்று, நான்காவது முன்னேற்றக்கலை கணியத்தில் தமிழ்முன்னோர் தெளிவு படுத்தியுள்ளனர்.

இந்த உள்ளெண்ணிக்கைத் தரவை உலகினரின் தனிமஇயல், நூறுவிழுக்காடு அப்படியே ஏற்றுக்கொள்கிறது. 

ஒருநேர்ஒருநிரை உள்ளெண்ணிக்கை அமைந்தது உயிர்வளி என்கிற ஆக்சிஜன் என்றும், இருநேர்இருநிரை உள்ளெண்ணிக்கை அமைந்தது ஹீலியம் என்றும் நூற்றுக்கும் மேலான உள்ளெண்ணிக்கை வகைகளைப் பட்டியல் இடுகிறது, உலகினரின் தனிமஇயல்.

நான் யார்? என்பதைக் கடவுள் அறிந்து கொள்ள, குமரிநாடன் குமரிநாடன் என்று, 'வெளி'யில் கோடானகோடிமுறை, என்னால், என்பெற்றோரால், உறவுகளால், நண்பர்களால், நான் கலந்துகொள்ளும் தொடர்புகளால் ஒலித்தும், ஒலிக்கப்பட்டும் கடவுளில் பதிவு செய்யப்படுகிறது. 

என்பெயர், செந்தமொழி தமிழில் உள்ள காரணம் பற்றி, நான் என் பாடாற்றல்கள் அனைத்திலும்  வருமானத்திற்குச் சொந்தக்காரன் ஆகிறேன். எனக்கு என்பெயர் உள்ளெண்ணிக்கை அடையாளம் ஆகிறது. கணியம், மந்திரம் என்கிற இரண்டு கலைகளை ஒட்டுமொத்த உலகத்தில் நான் மட்டுமே மீட்டெடுத்து இருக்கிறேன். என் மந்திரம் மாணவர்கள் மிகப்பேரளளவாக வளர்ந்து மகிழ்ந்து வருகிறார்கள்.

நீங்கள் உங்கள் பிள்ளைக்களுக்குச் சூட்டிய பெயரும், உங்கள் பெற்றோர் உங்களுக்குச் சூட்டிய பெயரும் அயல்மொழியினரின் புலமைஆதாயத்திற்கு செந்தமான பெயர் என்கிற காரணம் பற்றி, உங்களுக்கு நீங்கள் பாடாற்றி ஈட்டும் எந்தச் செல்வமும், புலமை ஆதாயம் கழிக்கப்பட்ட கூலிக்கானது. 

கடவுளுக்கு, உங்கள் உள்ளெண்ணிக்கையை பதிவு செய்துகொள்ள வேண்டிய தேவை இல்லாத காரணம் பற்றி, உங்கள் பெயர் கடவுளில் அடிமை எண்ணாகவே பதிவாகிறது, அந்த வகைக்கு நீங்கள் ஈட்டுகிற எந்தச்செல்வமும் உங்களுக்கு கூலியாகவே கடவுளால் வழங்கப்படுகிறது.

கடந்த 3500 ஆண்டுகளாக தமிழினத்தில் மிகமிகப் பேரளவினர் கூலித்தளத்திலேயே உரிமைக்காகப் போராடி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நமது தமிழ்முன்னோர் ஆகிய, கணியன் பூங்குன்றனார், மெய்மொழியாரின் காலத்தில், தமிழுக்கு என்று சேரநாடு, சோழநாடு, பாண்டியநாடு ஆகிய மூன்று நாடுகள் இருந்தன. அவர்களின் முன்னோர் காலத்தில், ஆரியர் வருகைக்கு முந்தைய 3500 ஆண்டுகளுக்கு முன்பு குமரிக்கண்டம் இணைந்த நடப்பில் இந்தியாவாக இருக்கிற, நாவலந்தேயம் முற்றாக தமிழுக்கான நிலமாக இருந்தது.

இன்றைக்கு நூறாயிரங்களில் மக்கள் தொகை கொண்ட மொழிக்கெல்லாம், அவர்கள் கடவுளில் சொந்த இடம் அமைத்துக் கொண்டிருக்கிற காரணம் பற்றி சொந்த நாடும் இருக்கிறது. 

ஒன்பது கோடியைத் தாண்டி மக்கள் தொகையைப் பெற்றிருக்கிற தமிழுக்கு சொந்தமான நாடு இல்லை. 
பிரபாகரனுக்கு அவரின் பெற்றோர் தமிழில் பெயர் சூட்டியிருந்திருந்தாலோ, அல்லது பிரபாகரன் தன்னுடைய பெயரைத் தமிழ்படுத்திக் கொண்டிருந்தாலோ தமிழுக்கு தமிழீழம் என்கிற ஒரு நாடு கிடைத்திருந்திருக்கும். 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.