தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் என்வாக்களிப்பு, நான் தெரிவு செய்த கட்சிக்கு பயனாகவில்லை. ஆனால் வென்ற கட்சிக்குப் பயன் ஆனது என்கடவுள்கேட்பு என்று தெரிவித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ளும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது: மனிதனில் இயங்குவது தாறுமாறு இயக்கம் கடவுளில் இயங்குவது சீரான இயக்கம் என்பதை நான் தெளிவாக அறிவேன். ஆனாலும் மனிதனில் இயங்குவது மக்களாட்சியின் கடமை என்கிற காரணம்பற்றி நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நான் வாக்களிப்பது எனது கடமை ஆகிறது. தமிழக வெற்றிக்கழகத்திற்கு மனித இயக்கமாக வெற்றிக்கு வாய்ப்பு இல்லை என்று பிழையாகக் கருதி, அதை எனது தேர்வில் முன்னெடுக்க முயலவில்லை. நாம்தமிழர் கட்சி வள்ளல்தன்மை, விருந்தோம்பல் ஆகியவற்றின் திரிபாக நடைமுறையில் இருந்து கொண்டு இருக்கிற இலவசத்திற்கு எதிரானது என்கிற காரணம் பற்றி அதற்கு எனது வாக்கு இல்லை. அதிமுக- தமிழியலுக்கு எதிரான பாஜகவின் கொத்தடிமை என்கிற காரணம் பற்றி, அதற்கு என் வாக்கு இல்லை. பாஜக தனக்கு எதிரியாக கருதுகிற திமுகவிற்கு நான் வாக்களித்தேன். மனிதனில் இயங்குகிற தாறுமாறு இயக்கமாக, நான் திமுகவிற்கு வாக்களித்திருந்தேன்! திமுகவை இப்படி முயக்கி இருக்க வேண்டும் என்கிற கடவுள் கேட்பும் எனக்கு உண்டு. திமுக மீதாக, நான் வேண்டும் கடவுள் முயக்கத்திற்கான, எனது எண்ண இயக்கங்கள்: திமுகவின் விரிவாக, திகழ்தமிழ முன்னேற்றக்கழகம் என்பதை நான் போரளவாக பயன்படுத்தி வந்திருக்கிறேன். திராவிடம் என்கிற போலிச்சொல்லில் எனக்கு உடன்பாடு இல்லை. திமுக தலைவரின் பெயரை இரும்பன் என்றே கொண்டாட வேண்டும் என்று கருதியிருப்பவன். ஸ்டாலின் என்கிற சீன மொழிப்பெயர் தமிழ்நாட்டு ஆட்சியாளருக்கு இருப்பது எனக்கான நெருடல். ஒரு குடும்பத்தில் மகளிர் உரிமைத்தொகை மாமியாருக்கு கொடுத்து மருமகளைப் பாகுபடுத்த வேண்டாம் என்று கருதுகிறேன். ஒரு குடும்பத்தில் கணவருக்கு சமூக நலத்துறையில் ஏதாவது உதவித் தொகை இருந்தால் மனைவிக்கு உரிமைத் தொகை மறுத்து உரிமைத் தொகையின் அடிப்படையைச் சிதைக்க வேண்டாம் என்று கருதுகிறேன். பேருந்தில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஓட்டுநரும் நடத்துனரும் இழிவாக பார்த்திருக்க வேண்டாம் என்று கருதுகிறேன். அரசே மதுக்கடை நடத்துவதை சமூக அவலமாகக் கருதுகிறேன். வாழ்க்கைக் கல்வியான பள்ளிக் கல்வி, தமிழ்வழியில் மட்டுமே அமைய வேண்டும். பட்டப்படிப்பு, ஆய்வு படிப்புகள் கலைக்கல்வியே என்கிற காரணம் பற்றி அதை வேண்டுமானால் எந்த மொழியிலும் முன்னெடுக்கலாம் என்பது எனது தெளிவான தமிழியல் முடிவு. பள்ளிக்கல்வியிலேயே ஆங்கிலத்தை முன்னெடுக்கிற திமுக மீது எனக்கு உடன்பாடு இல்லை. கடவுள், திமுகவைத் திருத்துவதற்கு, திராவிட என்கிற சொல்லை அகற்றி, தமிழக என்கிற சொல்லை நிறுவிட தமிழக வெற்றிக் கழகத்தி்ற்கு வெற்றி வழங்கியிருப்பது எனது கடவுள் கேட்புக்கு வெற்றி என்று கருதுகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் என்வாக்களிப்பு, நான் தெரிவு செய்த கட்சிக்கு பயனாகவில்லை. ஆனால் வென்ற கட்சிக்குப் பயன் ஆனது என்கடவுள்கேட்பு என்று தெரிவித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.
1.கிழமை: புதியம்கிழமை
2.நாள்: 23
3.மாதம்: சித்திரை
4.தமிழ்த்தொடராண்டு: 5128
5.தமிழ்த்தொடர்நாள்: 1872701
திகழ்தமிழ மாதிரி ஆட்சி என்கிற முழக்கத்தைத் திமுகவிடம் எதிர் பார்க்கிறேன். திராவிட மாடல் என்கிற கலப்பு மொழிநடை நூறு விழுக்காடு பிழை என்கிற கருதுகோளில்.



