Show all

லாஸ்லியாவிற்கு வெளியில் காத்திருக்கும் பரிசு!

காதலில் விழுந்த லாஸ்லியாவை ஒரு வழியாக தேற்றி நேர்படுத்தியிருக்கின்றனர் பிக்பாசும், கமலும். பிக்பாஸ் தலைப்பை வெல்ல மிக நெருக்கத்திற்கு வந்து விட்டார் லாஸ்லியா. இந்த நிலையில் அவருக்கு வெளியிலும் ஒரு பரிசு காத்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில், மூன்றாவது முறையாக கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 80 நாட்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தற்போதைய மூன்றாவது பருவம், இரண்டு பருவங்களை விடவும் சிறப்பாக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

பிக் பாஸ் போட்டியில் பங்கேற்ற போட்டியாளர்கள் வெளியே வந்தவுடன் அவர்களுக்கு பட வாய்ப்புகள், விளம்பர வாய்ப்புகள் மற்றும் தொலைக்காட்சியில் இருக்கும் போட்டி நிகழ்ச்சிகளிலும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். 
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான சரவணன் வெளியே வந்தவுடன் அவருக்கு நடப்பு ஆண்டுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் வெளியான சிறந்த படங்களை தேர்வு செய்ய திரைப்பட மானியக் குழுவில் இடம் கிடைத்துள்ளது. 

இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக இருக்கும் லாஸ்லியாவிற்கு சின்னத்திரையில் மக்கள் நடுவே அதிகம் பேசப்பட்ட தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி மற்றும் சரவணன் மீனாட்சி இந்த இரண்டு தொடரில் எதாவது ஒன்றின் இரண்டாம் பாகத்தில் லாஸ்லிய நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திரைத்துறையில் லாஸ்லியாவிற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று கூறியிருந்தார் என்பதும் குறிப்படத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,276.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.