உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுள், அண்மையில் தனது 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஒரு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தொடங்கிய கூகுள், இப்போது, இணைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் ஈட்டிய வருமானம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான ஆல்பாபெட் 26.24 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே காலாண்டில் கூகுளின் விளம்பரங்கள் 23 விழுக்காடு அதிக வருமானம் ஈட்டியுள்ளது. சுந்தர் பிச்சையின் தலைமையில், கூகுளின் வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 26விழுக்காடு அதிகரித்து, 23.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பெருமிதம்!உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுள், அண்மையில் தனது 20வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. ஒரு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தொடங்கிய கூகுள், இப்போது, இணைய உலகின் தவிர்க்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, கூகுள் நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் கால்பகுதியில் ஈட்டிய வருமானம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான ஆல்பாபெட் 26.24 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதே காலாண்டில் கூகுளின் விளம்பரங்கள் 23 விழுக்காடு அதிக வருமானம் ஈட்டியுள்ளது. சுந்தர் பிச்சையின் தலைமையில், கூகுளின் வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், இரண்டாம் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் வருமானம் 26விழுக்காடு அதிகரித்து, 23.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் பெருமிதம்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



