Show all

ஒரு வழியாக அழகிரி பேரணி முடிந்தது. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி

 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி   உள்ளனர்.  மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி முடிந்துள்ளது. இதற்காக கடந்த ஒரு கிழமையாக  தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார் அழகிரி. இதற்காக சில மதுரை நிர்வாகிகள் நேற்றே, சென்னைக்கு சென்று ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதற்காக நேற்று அதிகாலை அழகிரி சென்னை விமான நிலையம் வந்தார். பின் தனியார் உணவகத்தில் தாங்கினார்.  இன்று காலை இந்தப் பேரணி தொடங்கி உள்ளது. இன்று காலை 11.30க்கு பேரணி தொடங்கியது.  இதற்காக சென்னையில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேரணி நடக்க உள்ள இடங்களில் எல்லாம் சுவரொட்டிகள்   இடம்பெற்று    உள்ளன. அதேபோல் வித்தியாசமான வசனங்களுடன் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.  இந்த அமைதி பேரணி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டது. அங்கிருந்து அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிந்துள்ளது. பாதுகாப்பு கருதி இவர்கள் அமைதி பேரணிக்கு திட்டமிட்டு இருந்த தூரம் குறைக்கப்பட்டது. இதனால் தாமதமாக தொடங்கி விரைவாக முடிந்தது பேரணி. இந்த நிலையில் இங்கு பாதுகாப்பு பணியில் அதிக அளவில் காவலர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்  மூன்று 3 துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவ்வளவு பேர் வந்து இருக்கிறார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. குறைந்தது 10 ஆயிரம் பேராவது கலந்து கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் பேரணி வாலாஜா சாலை வழியாக கடற்கரை சாலை சென்று மெரினாவில் முடிந்தது. பேரணியின் முடிவில் அண்ணா, கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி செலுத்தினார். முதலில் அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் அழகிரி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,901

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.