Show all

உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது! பாஜகவுக்கு-இம்ரான் கான்

இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த பாஜக திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது அவர்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது. என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கான்.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இம்ரான்கான் தனது கீச்சுப் பதிவில்: இந்திய எல்லையில் நுழைந்த பாகிஸ்தானின் எப் 16 ரக போர் விமானங்களை இந்திய விமானப்படை விரட்டியடித்தது. அப்போது பாகிஸ்தானின் ஒரு எப் 16 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும், பாகிஸ்தான் விமானப்படையில் அனைத்து எப் 16 ரக போர் விமானங்களும் இருப்பதாக அமெரிக்க நாளிதழில் வெளியுறவுத்துறை கொள்கை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  

(உங்கள் நாட்டு மக்களுக்கு கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன என்பதை சொல்லி வாக்கு கேளுங்கள். உங்கள் எதிரிகளை தேசத்துரோகிகள் என்று பட்டம் கட்டுவதற்கும், உங்களை தேசியவாதிகளாகக் காட்டிக் கொள்வதற்கும் எங்களை வீணே வம்புக்;கு இழுக்காதீர்கள். உங்கள் போதைக்கு நாங்கள் ஊறுகாயா? என்று கேள்வி எழுப்புவது போன்ற பாணியில்) 

உண்மை மட்டுமே எப்போதும் வெல்லும். அனைவரும் உண்மையாக நடந்துகொள்வது தான் சிறந்தது. 

எனவே இந்தியாவில் போர் வெறியை ஏற்படுத்தி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறலாம் என்று நினைத்த உங்கள் திட்டம் தோல்விடைந்துவிட்டது. மேலும் இது உங்களுக்கே எதிராகவும் அமைந்துவிட்டது. என்று கீச்சில் பதிவிட்டுள்ளார் பாகிஸ்தான் தலைமைஅமைச்சர் இம்ரான்கான்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,115.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.