தேர்தல் களத்தில் கவிதைத் தமிழ் பேசும் தலைவர்களின் எண்ணிக்கையால் மீண்டும் அண்ணா, நாவலர், காலத்து தமிழகம் நம் கண்முன் விரிந்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. 25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து விட்டதால், இன்று இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டோம். அவர்கள் மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள். 'மோடி சுப்பன் இல்ல.. அவர் அப்பனே வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை' என அ.ம.மு.க., துணைப்பொதுச் செயலாளர் தினகரன் அண்ணா காலத்து அடுக்குத் தமிழ் பேசி வாக்கு சேகரித்தார். மோடிக்கு மட்டுமல்லாத ஸ்டெர்லைட்டுக்கும் அடிமையான அரசின் காவல்துறை அநியாயமாய் 13 அப்பாவி பொது மக்களின் உயிர் குடித்த- தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கோவில்பட்டியில் தேர்தல் கருத்துப் பரப்புதல் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'ஸ்டெர்லைட் ஆலை, காவிரி, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், நீட் தேர்வு என எந்தப் பிரச்னையாக இருந்தாலும் காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் தமிழகத்தை புறக்கணிக்கின்றன. காரணம், இவர்களுக்குத் தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில்தான் இவர்களுக்குச் செல்வாக்கு உள்ளது. அதனால்தான், அந்த மக்களுக்காக மட்டும் குரல் கொடுக்கின்றனர். தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட புறக்கணிக்கின்றனர். ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என முந்தைய தேர்தலில் மோடியின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போனார்கள். மோடியின் சர்வாதிகார தன்மையால் பண மதிப்பிழப்பு அறிவித்த போது ஏழை மக்கள்தான் சாலையில் நின்றனர். ஆனால், பணக்காரர்கள் யாரும் சாலையில் நிற்கவில்லை. செயலலிதா நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். இன்று இந்த அடிமைகளிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டோம், அவர்கள் மோடியிடம் மண்டியிட்டு வணங்குகிறார்கள். 'மோடி சுப்பன் இல்ல.. அவர் அப்பனே வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை' என்று பேசினார் தினகரன். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,116.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.