இந்தியத் தலைமை அமைச்சர் என்ற முறையில், வழங்கப் படுகிற இலவச விமானப் பயண வாய்ப்பை, இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பயன்படுத்திக் கொள்ளாத அளவிற்கு பயன் படுத்திக் கொண்டார் மோடி! அது போல ஒரு விமான நிறுவனம் கொடுத்த வாய்ப்பை பயன் படுத்தி அந்த நிறுவனத்தை வைத்துச் செய்து விட்டார் ஒரு பயணி 13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியத் தலைமை அமைச்சர் என்ற முறையில், வழங்கப் படுகிற இலவச விமானப் பயண வாய்ப்பை, இதுவரை எந்தத் தலைமை அமைச்சரும் பயன்படுத்திக் கொள்ளாத அளவிற்கு பயன் படுத்திக் கொண்டார் மோடி! மீண்டும் வடஇந்தியர்கள் மோடிக்குத் தலைமைஅமைச்சர் பதவி வழங்கியிருக்கின்றனர். மோடி பதவி ஏற்பதற்கு முன்பே- மாலைத்தீவுக்கு பயணத் திட்டம் வடிவமைக்கப் படவுள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சுமார் 250,000 டாலர் செலவு செய்து அமெரிக்கா ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமான சேவை நிறுவனத்தில் எல்லையில்லா வாழ்நாள் பயணச்சீட்டு ஒன்றைப் பெற்றார். அதிலும் குறிப்பாக அது முதல் வகுப்பிற்கான எல்லையில்லா வாழ்நாள் பயணச்சீட்டு. இந்த எல்லையில்லா வாழ்நாள் பயணச்சீட்டைப் பயன்படுத்தி அந்த நபர் சுமார் 10,000 முறைக்கு மேல் அந்த விமான சேவையில் முதல் வகுப்பில் பயணம் செய்து அந்த நிறுவனத்திற்கு 21,000,000 டாலர் செலவு வைத்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து இதை கண்டறிந்த அந்த நிறுவனம் அவரின் அந்தச் சலுகை பயணசீட்டை ரத்து செய்ததாம். மோடியை விட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்தனே இந்தப் பயணி. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,165.
ஆம்! சோழர் காலத்தில் தமிழகப் பகுதியாக இருந்து, மீண்டும் ஒரு முறை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் அமைப்பால் கைப்பற்றப்பட்ட மாலைத் தீவுதான். அவர்களிடம் இருந்து விடுவிக்க, இந்தியா தனது விமான மற்றும் கடல் படைகளை அனுப்பி மாலைதீவு மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு மாலைதீவைக் கைப்பற்றியது. தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்திடம் இருந்து மாலைதீவை மீட்கும் அதிரடி நடவடிக்கையை கற்றாளை படை நடவடிக்கை என்ற பெயரில் மேற்கொண்டது 31ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இராணுவம். அந்த மாலைத்தீவுதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.