தமிழகம் அறிவு விளைத்த மண்! இங்கே 'பாஜகவின், 'தாமரை மலர்ந்தே தீரும்' 'சவுக்கிதார்' போன்ற தாயத்து விற்பனை சந்தைப்பாடு' எல்லாம் செல்லுபடியாகாது. உங்கள் சந்தைப்பாட்டை வைத்துக் கொண்டு என்னால் ஒற்றை வாக்கும் அறுவடை செய்ய முடியாது. நான் சொல்லும் திட்டங்களை ஒவ்வொன்றாக செயல் படுத்தப்பாருங்கள் என்று- 14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் உள்ள தொடர்வண்டித் துறைப் பணிகளுக்கு தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்வண்டித் துறையில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று, தொடர்வண்டித் துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம், தமிழக பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாகவும், இந்தக் கோரிக்கையை ஏற்று நடுவண் அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தமிழிசை தெரிவிக்கிறார். இது உண்மையாகும் பட்சத்தில், தமிழிசைக்கு நமது வாழ்த்துக்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,166.
தமிழக தோல்விக்கு கடிந்துகொண்ட பாஜக தலைமையிடம் கறார்காட்டியிருக்கிறார் தமிழிசை. முதல் திட்டத்திலேயே ஆறு வெற்றிப் புள்ளிகளைக் குவிப்பார் போலிருக்கிறது தமிழிசை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.