பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் கவன அறிக்கை அனுப்பியுள்ளதாம். தமிழகத்தின் தனித்துவத்தை முற்றாக முறியடிக்கும் கோட்பாடுகளை கட்சியின் கோட்பாடுகளாக வைத்துக் கொண்டு, பாஜகவை முன்னெடுக்க முடியவில்லை என்பதாக, பாரம்பரியம் மிக்க தமிழிசையை குறைபட்டுக் கொள்வதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது. 13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்தில்- அதிமுகவும், எந்தக் கட்சியும் பாஜகவை தமிழ்நாட்டில் கூட்டணிக்கு ஏற்றுக் கொள்ளத் தயார் இல்லாத நிலையில், பாஜகவும் கூட்டணி அமைத்தன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வியைத் தழுவியது. பா.ஜனதா தலைவர்கள் 5 பேரும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டனர். தமிழக விரோத மோடியின் கோட்பாடுகள் காரணமாக, பெரிய தோல்வியை பாஜக சந்திக்க நேரிட்டது என்பது உண்மையான உண்மை. இந்த நிலையில், தமிழக பா.ஜனதா மீது மேலிட தலைவர்கள் கோபமாக இருக்கிறார்களாம். தமிழகத்தில் பாஜக மிகப் பெரும் வெற்றி பெற, தமிழிசை மனம் விட்டு சொல்லும் ஆலோசனையை, பாஜக ஏற்றுக் கொள்ளுமானால், தமிழகத்தில் பாஜக வெற்றி பெறலாம்! அதை விடுத்து பாஜகவின் தாயத்து விற்பனைக் கோட்பாடுகளைச் சந்தைப் படுத்த கடைவிரிக்கச் சொன்னால், கிராமச் சந்தைகளில் பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடுவதாகக் கூறி தாயத்து விற்கும், .....மஸ்தான் போலத்தானே தமிழிசை செயல்பட முடியும். தமிழக பா.ஜனதா மீது பா.ஜனதா தலைமை கோபமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே யென்று கேட்டால்- அதெல்லாம் ஒன்றும் இல்லை. எங்கள் கட்சிக்கு எங்களைப் பற்றியும் தெரியும். தமிழகத்தில் அதற்கான களத்தை பற்றியும் தெரியும். என்கிறார் தமிழிசை. ஓ! தெரிந்தே தான் நடக்கிறதா தாயத்து விற்பனை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,165.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



