இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை என்கிற கட்டுரையின் தொடர்ச்சியாக இந்தக் கட்டுரையை முன்னெடுக்கிற காரணம் பற்றி, இந்தக் கட்டுரையின் தெளிவான புரிதலுக்கு, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கு அடிப்படை' என்கிற கட்டுரையை, இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்பாகப் படித்துவிடுவது சிறப்பு. ஐம்பொழுது: சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் என்றே எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை ஆகும். அது இடுகுறியானதும் பொய்மையும் ஆகும். சோம்பல் இல்லாத மனிதர் என்று உலகில் ஒருவரும் இருக்க முடியாது. ஆக சோம்பல் இல்லாத மனிதர் என்று உலகில் ஒருவரும் இருக்க முடியாது என்கிற நிலையில், அது ஏன் அப்படி? என்று சிந்திக்க முயலாமல்; சோம்பி நிற்பதையும் குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால் சோம்பல் என்பது இயங்க மறுப்பதற்கான நோக்கம் அல்ல என்பதே உண்மை. சோம்பல் என்பது இயக்கத்தின் மீது இயங்க மறுக்கிற நோக்கமேயன்றி, இயங்;;கவே மறுக்கிற நோக்கம் அன்று. இயக்கத்தின் மீது இயங்குவது தாறுமாறான இயக்கமாக இருக்கிற காரணத்தால், தேவையற்ற உழைப்பு, தேவையற்ற ஆற்றல் இழப்பு, தேவையற்ற நேரவீணடிப்பு ஆகிய பட்டறிவின் காரணம் பற்றியே, ஒவ்வொருவருக்கும் இயக்கத்தின் மீது இயங்குவதில் சோம்பல் எழுகிறது. ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையை இலகுவாக முன்னெடுத்துச் செல்வதற்கு அவனுக்கு சீரான இயக்கம் தேவையாகிறது. சீரான இயக்கம் இயக்கமின்மையின் மீதே சாத்தியம் என்பதை 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கட்டுரை தெளிவாக விளக்கியிருக்கிறது அல்லவா! ஆகவே எந்த மனிதனின் சோம்பலும் கண்டிக்கத்தக்கது அல்ல. இயக்கத்தின் மீது இயங்குகிற காரணம் பற்றியது சோம்பல் என்று தெளிவுறுத்தத்தக்கது மட்டுமே ஆகும். ஒவ்வொரு மனிதனும், சீரான இயக்கத்திற்கான நோக்கில், தனக்கான இயக்கமின்மைகளைக் கட்டமைப்பதற்கு பாடாற்றுவதே அவரவரின் வாழ்க்கைப் போக்காக இருக்கிறது நான் எழுதுகிற இந்தக் கட்டுரையைப் படிக்கிற அனைவரும் எனக்கான இயக்கமின்மைகள் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிற என்னுடைய நோக்கம் எனக்கான இயக்கமின்மைகளை உருவாக்குவது ஆகிறது அல்லவா? இந்தக் கட்டுரையை நிறைய பேர்கள் படிப்பதற்கு, இந்தக் கட்டுரையில், உங்கள் நெஞ்சை நேரடியாகச் சென்று தொடுகிற மாதிரியான செய்திகளையும், சொற்களில் ஈர்ப்பையும் கூட்டி, நான் கலைமுனைப்பைக் கூட்ட வேண்டும். எந்த அளவிற்கு என்னுடைய கலைமுனைப்பு இருக்கிறதோ அந்த அளவிற்கு எனக்கான இயக்கமின்மைகளைப் பேரளவாக நான் ஈட்டமுடியும் அல்லவா! எம்ஜியார், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் ஆகியவர்கள், அவர்களின் வெற்றி என்கிற சீரான இயக்கத்திற்கு, தங்கள் நடிப்பாற்றலைக் கூட்டி கலைத்தளத்தில் பேரளவான இயக்கமின்மைகளைக் கட்டமைத்தவர்கள். அண்ணா, கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா, ஸ்டாலின் போற்றவர்கள், அவர்களின் வெற்றி என்கிற சீரான இயக்கத்திற்கு, தங்கள் தனித்திறன்களை வெளிப்படுத்தி அரசியல் தளத்தில் பேரளவான இயக்கமின்மைகளைக் கட்டமைத்தவர்கள். இயேசு, நபிகள்நாயகம், புத்தர், மகாவீரர், குருநானக் போன்றவர்கள், அவர்களின் வெற்றி என்கிற சீரான இயக்கத்திற்கு, 'தாங்கள் கேட்டால் கடவுள் கொடுக்கிறது' என்றும் அதை 'மக்களுக்குத் தங்களால் பெற்றுத்தர முடியும்' என்றும், இடுகுறியாக புரிந்து கொண்ட செய்திகள் மூலம், மதத்தளத்தில் பேரளவான இயக்கமின்மைகளைக் கட்டமைத்தவர்கள். இப்படி தொழில், வணிகம், தனித்திறன் என்று ஒவ்வொரு துறையிலும் இயக்கமின்மைகளைக் குவித்த வெற்றியாளர்களைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். நீட் என்கிற தேர்வைக் கட்டமைத்து, ஒன்றியப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே பேரளவான இயக்கமின்மைகளைக் குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்கு, மருத்துவத்தில் நீட் என்கிற தடைத்தேர்வை, பிராமணியமும், பாஜகவும் ஆட்சி அதிகாரத்தில், குறுக்குவழியில், தடைத்தேர்வை முன்னெடுத்துச் செல்கின்றன. பிராமணியம், அராபியம், ஐரோப்பயம், உலகமதங்கள், 'ஒற்றை முதலாளித்துவம்' ஆகிய பாகுபாட்டியல் கோட்பாடு, ஆதிக்க அடாவடியிலேயே இயக்கமின்மைகளைக் குவிக்கிற கோட்பாடு ஆகும். மார்க்சியம், திராவிடம், தமிழ்த்தேசியம், 'நிருவாக மற்றும் உடலுழைப்புக் கூலித்தளம்' ஆகிய முரண்பாட்டியல் கோட்பாடு போராடி இயக்கமின்மைகளை உரிமைகளாக கேட்டுப்பெறுகிற கோட்பாடு ஆகும். இருபக்கத்திலும் நின்றுபார்த்து கிடைக்கும் தீர்வை- தங்கள் சொந்தவாழ்க்கையில் பின்பற்றுகிற தனிமனிதர்கள், தங்கள் முதல் உடைமைகள் ஆன தனதுஉடல்நலத்தையும் தமிழையும் (சொந்தமொழி) கொண்டாடி இருப்பவர்கள், தமிழியல் ஆகிய 'வகைப்பாட்டியல்கோட்பாடு' கடவுளில் நின்று கடவுளை இயக்கமின்மையாகக் கட்டமைக்கிற கோட்பாடு ஆகும். பிராமணிய வரவுக்கு முந்தைய காலமான, 3500 ஆண்டுகளுக்கு முந்தைய, தமிழும், தமிழினமும் மட்டுமே வாழ்ந்திருந்த நாவலந்தேய இந்தியாவில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று, அனைவரும் இயக்கமின்மைகளைப் பேரளவாக ஈட்டி, வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருக்கும் வகைக்குக் கண்டறிந்த பேருண்மை: முதலும் முற்றுமான இயக்கமின்மையான, இடம், வெளி, விண்வெளி, விசும்பு, உருத்திரம் என்கிற கடவுளை முதலில் அழைத்து, கடவுள் காட்டும் வழியில், கடவுள் வழங்கும் இயக்கமின்மைகளுக்கு நோற்றிருப்பது என்பதே ஆகும். கடவுளை முதலில் அழைப்பதைத் தமிழால் (சொந்தமொழி) முன்னெடுக்க வேண்டும். அதுவே கடவுளின் முயக்கத்தை மிகமிகத் தெளிவாகப் பெறுவதற்கான வழியாகும். கடவுளை முதலில் அழைப்பதை எண்ணத்தால் முன்னெடுப்பதில் கொஞ்சமாக தெளிவின்மை முந்தும். அதனால் கடவுளின் முயக்கம் துண்டு துக்காக அமையும். கடவுளை முதலில் அழைப்பதை செயலால் முன்னெடுப்பதில் நிறையவே தெளிவின்மை முந்தும். அதனால் கடவுளின் முயக்கம் காலம்கடந்து ஆகூழாகவே வந்துசேரும். அதை பிராமணிய அடிப்படையில் அதிர்ஷ்டம் என்றும் கர்மா என்றும் இடுகுறியான தலைப்புகளில் பேரளவான புனைவுகளை கட்டமைத்து குழம்பி வருகிறோம். செயல் குறித்த பேரளவான புனைவுகளை உண்மையென்று கருதி, அதன் அடிப்படையில் வெறுமனே செயல் போதும் என்னெண்ணி, உருவாக்கப்பட்ட கருத்தே எதையும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கு என்கிற செயல்முiறாகும். ஒவ்வொருவரும், ஒவ்வொரு முன்னெடுப்பிற்கும் தமிழில் (சொந்தமொழி) கடவுளை வேண்டி, கடவுள் காட்டும் வழியில், கடவுள் வழங்கும் இயக்கமின்மைகளுக்கு நோற்றிருப்பதே தொடர்ந்து வெற்றிகளை குவித்துக்கொண்டே இருப்பதற்கான இயக்கமின்மை ஈட்டும் வழியும், சோம்பல் அறவே தேவையில்லாத வகையும் ஆன பாடாற்றல் ஆகும். இந்த வகைக்கு தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலையே மந்திரம் ஆகும்.
1.கிழமை: ஞாயிறு.
2.நாள்: 27
3.மாதம்: மார்கழி
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872586
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



