முத்தமிழின் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் கலைகளில், இரண்டாவது இயல்அறிவு, ஒன்றாவது இயல்கணக்கு. அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். அந்த மந்திரம், 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று உணர்ந்ததற்கான இரண்டு நிகழ்வுகள் குறித்த விளக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. ஒரு விளக்கில் விசும்பு, நிலம், நீர், தீ, காற்று என்கிற ஐந்திரங்களும் பங்குபெற்று பாடாற்றுகிறது என்பதே உறுதியான உண்மை. ஒரு விளக்கில், விசும்பு என்கிற முதலாவது திரமாக அமைகிறது நம்மால் திரிக்கப்பட்டபஞ்சு. நிலம் என்கிற இரண்டாவது திரமாக அமைகிறது மண்ணால் ஆன விளக்கு. நீர் என்கிற மூன்றாவது திரமாக அமைகிறது அந்த விளக்கில் ஊற்றப்படுகிற விளக்குநெய். தீ என்கிற நான்காவது திரமாக அமைகிறது பஞ்சில் ஏற்றப்பட்ட நெருப்பு. காற்று என்கிற ஐந்தாவது திரமாக அமைகிறது தீ எரியத்துணை புரியும் வளி. ஆகவே, விளக்கில் அமைந்த எந்த ஒன்றையும் விட்டுவிடாமல், இருமைக் கோட்பாடு என்கிற, தமிழியல் அடிப்படையில் பார்க்கிற போது, ஒரு விளக்கு என்பது வெறுமனே இருளை விலக்குதானதாக கருதியிருக்கிற பாகுபாட்டியல் என்கிற பொய்யை விலக்கி, ஐந்திரங்களின் பாடாற்றல் என்கிற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, விளக்கு என்பது, வெறுமனே இருளை விலக்குவதானதாக கருதியிருக்கிற பொய்யை விலக்கி, ஐந்திரங்களின் பாடாற்றல் என்கிற உண்மை விளங்குகிறது. தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம் முழுக்க முழுக்க ஐந்திரத்தில் ஒன்றான கடவுள் பற்றிய உண்மையைப் புரிந்து கொள்வதற்கான விளக்கம் என்கிற நிலையில், மந்திரத்திற்கு, விளக்கு என்னும் சொல்லுக்கு ஐந்திரம் என்கிற அடைமொழி சேர்த்து, தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு! என்று தலைப்பிடலாம் என்று முடிவு செய்துகொள்ள முடிகிறது. உண்மை ஒன்றே ஒன்றுதான். பொய்கள் எண்ணிக்கை அற்ற பல. நான் குமரிநாடன் என்பது உண்மை. நான் இமயன் என்றோ நான் நெடுங்கிள்ளி என்றோ, நான் முகிலன் என்றோ எண்ணிக்கை அற்ற பெயர்களில் அடையாளம் காட்ட முனையப்பட்டாலும் அத்தனையும் பொய்தானே! மந்திரம் என்கிற தமிழ்முன்னோர் தந்த ஐந்திர விளக்கு பொய்களை அகற்றி ஒன்றே ஒன்றான கடவுளைக் காட்டுவதற்கான விளக்கு ஆகும். தமிழ்முன்னோர் தந்த ஐந்திர விளக்கை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் வகைக்கு நான் முன்னெடுத்துள்ள நூலே 'தமிழ்முன்னோர் நிறுவிய 5வது முன்னேற்றக்கலை மந்திரம் என்பது ஆகும். மந்திரம் கற்பித்தலுக்கு, தமிழறிஞரும், மந்திரம் ஆசிரியரும் ஆன இளந்தமிழ்வேள் ஐயா அவர்கள் ஒருங்கிணைத்த, இரண்டாவது அமர்வு- முதலாவது அமர்விலேயே மந்திரத்தை முழுமையாகப் புரிந்துகொண்டவரும், இரண்டவது அமர்வுக்கு முன்பே மந்திரம் நூலை முழுமையாகப் படித்து முடித்தவரும் ஆகி, மந்திரம் ஆசிரியாராக பாடாற்றும் தகைமைக்கு உரிய தமிழ்நிறை.சரசுவதி அவர்கள் இல்லத்தில், முன்னெடுக்கப்பட்டது. அன்றைய அமர்வில் மந்திரம் கற்பித்தல் பொறுப்பில் பாடாற்றியவர் தமிழ்நிறை.சரசுவதி ஆவார்கள். அவர்கள் ஐந்திரத்தில் ஒன்றான கடவுளைப் புரிந்து கொள்ள முன்னெடுத்த விளக்கம் அவருக்கு மட்டுமான தனித்துவ விளக்கமாக அமைந்திருந்தது. எனக்குள் பெருவியப்பை அளித்தது. அந்த வியப்பே இதுவரையிலான விளக்கு குறித்த ஆய்வை என்னுள் விதைத்தது. அன்றே நான் சென்னைக்குத் திரும்பிய நிலையில், அன்றைய இரவு எனக்குப் பேருந்து பயணமாக அமைந்தது. பேருந்தில் இரவில் பயணிக்கும் போது நன்றாகத் தூங்கி விடுவதே எனது வாடிக்கையாகும். ஆனால் அன்றைய இரவு தமிழ்முன்னோரோடு பேரளவாகத் தொடர்பில் இருந்த, விளக்கு, விளக்கம், விளக்கவுரை, விளச்சீர், விளம்பு, விளங்கு, விளி, விளிவேற்றுமை, விளை, விளைச்சல், விளையாட்டு, விளைபுலம், விளைநிலம், கலங்கரை விளக்கம், விளக்கேற்றுதல், கார்த்திகையில் விளக்கேற்றுத் திருவிழா என்று தரவுகளைக் குவித்த நிலையில் விளக்கு மந்திரத்தின் பன்முக விளக்கத்திற்கு கலங்கரை விளக்கமாக அமைந்தது. மந்திரத்தைத் தயக்கமேதும் இல்லாமல் உறுதியாக 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று கொண்டாடலாம் என்று முடிவு செய்யத் துணையானது, நான் மகிழ்ந்து மலைத்து தெரிவிக்கிற அடுத்த நிகழ்வின் வரலாறு. அமிர்தம் பீட்டர்ராசன் ஐயா அவர்கள், புலனச்செயலி வழியாக அழைப்பு அனுப்பி நான் கலந்து கொண்ட விழா, 'ஐம்பேரற்றல் பெருவிழா-5127' இந்தப்பெருவிழாவை, அமிர்தம் பீட்டர்ராசன் ஐயா அவர்கள், தன்னால் நிறுவப்பட்டு, பேரளுமைகளின் ஒத்துழைப்போடு நூற்று நான்கு கல்தொலைவைக் கடந்து வந்த வரலாற்றோடு, பசுமைப் பொறியாளர்களோடு கலந்து நடத்திய பெருவிழா ஆகும். அந்தப்பெருவிழாவின் வரலாற்றுத் தளத்தில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள்: அரிமாசங்கம், சென்னை நான் ஓர் ஐஎஎஸ் அகடமி, மாசாபி பவர்டெக் பிரைவேட் லிமிடெட், ஜீவன் பாக் சிஸ்டம், அம்பத்தூர் பேச்சிக்கண்ணன் அறக்கட்டளை, அறம் பதிப்பகம், நிமிர் இலக்கிய வட்டம் ஆகியன. அந்தப் பெருவிழா முன்னெடுக்கப்பட்ட நாள்: கருக்கரிவாள் கிழமை, 7ஆவணி, தமிழ்த்தொடராண்டு-5127 (23.08.2025). இடம்: செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, பழைய மாமல்லபுரம் சாலை, சென்னை- 600119. பங்குபெற்ற பேரளுமைகள்: பத்மபூசன் சிவதாணுப்பிள்ளை (அணுஇயல்அறிவர்), பேராசிரியர்.கருணானந்தம், கணக்காயர்.பிரதாய் உள்ளிட்டோர். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர்அணை- தமிழியக்கம், தமிழ்ச்சங்கம், அனல்மின் இலக்கிய வட்டம், பன்னாட்டு தமிழுறவு மன்றம், காமராசர் நற்பணிமன்றம், மால்கோ இலக்கிய வட்டம், தமிழியல் கல்வித்தளம், சேலத்து தமிழ் அமைப்புகள், விசும்பு மாதஇதழ், எண்ணச்சோலை கையெழுத்து இதழ் ஆகியவற்றில் தோளோடு தோள்உரசி கலந்துரையாடியிருந்த அமிர்தம் பீட்டர்ராசன், தமிழியலன், காந்திலெனின், சக்கையா, இராமசுப்பிரமணியன் ஆகியோரைச் சந்திக்க முடிந்தது, இந்த ஐம்பேரற்றல் பெருவிழாவில். புலனச்செயலியில் மட்டுமே பார்த்து வந்த பாவலர் மன்னர்மன்னன், தமிழ்நேர். பாபுசசிதரன், தமிழ்நேர். வெற்றிநிலவன் ஆகியோரை நேரில் சந்திக்க முடிந்தது. இந்தச் சந்திப்பில்தான் அமிர்தம் பீட்டர்ராசன் ஐயா அவர்களிடம், ஐம்பேராற்றல்பெருவிழாவில், தமிழ்முன்னோர் நிறுவிய 5வது முன்னேற்றக்கலை மந்திரம் நூலை வழங்கும் வாய்பை- ஐம்;;பேரற்றலில், நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளின், சீரான இயக்கத்திற்கு காரணமான கடவுள் என்கிற இயக்கமின்மை, எமது வரலாற்றுத் தரவுகளின் இயக்க அடிப்படையில் முயக்கித்; தந்தது. சில நாட்களிலேயே அமிர்தம் பீட்டர்ராசன் ஐயா அவர்கள் என்னைப் பேசியில் அழைத்து, மந்திரத்தை, 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று நிறுவலாம் என்பதற்கான உரமூட்டலை வழங்கிட்டகளம்: சான்றோர்தளம் முன்னெடுத்த மின்னூல் வெளியீட்டு அரங்கம் 105 என்கிற குவியத்தில் கூடும் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுமைகள் திருப்பத்தூர் வாகித் ஐயா அவர்கள், தமிழ்நிறை.சாலினி ஜெரால்ட் அவர்கள், கவிதைக்கரை கவிஞர் வெனான்சியஸ் அவர்கள், தமிழ்நேர்.வெற்றிநிலவன் அவர்கள், பாவலர். மன்னர் மன்னன் அவர்கள் ஆகியோர், என் மந்திரம்நூலை மனதில் ஏந்தி ஆளுக்கொரு கோணத்தில் கடவுளைக் காட்டினார்கள். சான்றோர் தள பேராளுமைகள், என் மந்திரம்நூலை மனதில் ஏந்தி ஆளுக்கொரு கோணத்தில் கடவுளைக் காட்டிய பாடாற்றலில், எனக்குக் கிடைத்த பேரூக்கம்தான் மந்திரத்தை, 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திர விளக்கு' என்கிற தலைப்பிற்கு உரியதாக்கலாம் என்கிற முடிவு. ஆம் மந்திரம் என்கிற தமிழ்முன்னோர் தந்த ஐந்திர விளக்கு, அவரவர் கோணத்திற்கு கடவுளைப் புரிந்து கொள்ள உறுதியாக உதவி, ஒவ்வொருவர் புரிந்து கொள்ளும் பாடளவிற்கு பேரளவான முன்னேற்றத்தை ஒவ்வொருவருக்கும் முயக்கித்தரும். வாழ்க! மறுபிறப்பு என்கிற அடுத்தடுத்த பிறப்பிலும், ஏழுதலைமுறை கடந்தும் பெருவெடி வரை.
ஒரு விளக்கை, இருளை விலக்கப்பயன் படுகிற தீ என்கிற ஒற்றை ஆற்றல் வெளிப்பாட்டிற்கான விளக்கு என்று அனைவரும் கொண்டாடி வருகிறோம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.