பிராமணியம் திணிக்கும் ஹிந்தியை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு, அடுத்து சமஸ்கிருதத்தையும், பிராகிருதத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரும் என்பதையும், பிராமணர்களில் ஒற்றைத்தமிழச்சி என்னுடைய மூலமொழி தமிழே என்று உணரத்தலைப்பட்டால், இந்திய வரலாறும், உலக வரலாறும் தலைக்கீழாக மாறும் என்பதையும் தெளிவுபடுத்துவதற்காக, உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. ஐம்பொழுது (பஞ்சாங்கம்) ஏறத்தாழ மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடு ஆசியாவிலிருந்து வெறுமனே ஆண்கள் கூட்டமாக வடநாவலந்தேயம் வருகை புரிந்த ஆரியர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவு. அவர்கள் அடை நாகரிகம் அறியாத பெருங்கூட்டத்தினர் என்கிற பொருளில், அவர்களுக்கு பேரம்மணர் (பிராமணர்) என்று பெயர்சூட்டியவர்கள் தமிழர்களே. அவர்கள் வழிவந்தவர்கள் ஆகிய, தங்களைப் பிராமணர் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறவர்களில், பெண்களில் ஒற்;றைப் பெண்ணும் பிராமணச்சி இல்லை. ஆண்களிலும், பிராமணிய மரபணு ஒற்றை மனிதருக்கும் இல்லாத நிலையில், இந்தியாவில் உள்ள பிராமணர்கள் அனைவரும் தமிழர்களே. பிராமணர்கள், தமிழ்ப்பெண்களை மணந்தே தங்கள் இனத்தை வளர்த்துக் கொண்டார்கள் என்கிற நிலையில் இந்தியாவில் பிராமணக் கூட்டத்தில் இருக்கிற அத்தனைப் பெண்களும் தமிழச்சிகளே! பாணினி, குந்தி, பாஞ்சலி, காந்தாரி, சுபத்திரை, உத்தரா, சத்தியவதி, அம்பா, சீதை, கௌசல்யா, கைகேயி, சூர்ப்பனகை, மண்டோதரி, அகல்யா, பார்வதி, சரஸ்வதி, லஷ்மி, நளாயினி, உள்ளிட்டு, பிராமணியச் செழுமைப்பாட்டிற்கான பாடாற்றல் வரலாற்றில் அனைவரும் தமிழச்சிகளே! பாணன் என்கிற இசைக்கலைஞனுக்கான பெண்பால் சொல் பாணத்தி, பாணி, பணினி என்பனவாகும். பாணினி தமிழ்ச்சொல் மட்டுமே. பாணினி என்கிற சொல்லில் தமிழ்முன்னோர் பொதித்துள்ள பொருளில், பிராமணர்கள் பேரளவு புனைவுகளோடு கொண்டாடி வருகிற பாணினி! ஒரு தமிழச்சியும், தமிழ்ப் பெண்பாற் புலவரும் ஆவார் என்று எளிதாக நிறுவலாம். நடு ஆசியாவில் இருந்து வெறுமனே ஆண்களின் கூட்டமாக வட நாவலந்தேயம் வந்த பிராமணர்கள், வளர்ந்து பெருகியதற்கு காரணம், பேரளவான வடநாவலந்தேயத் தமிழ்ப்பெண்கள், அவர்களின் காதல்வலையில் விழுந்து பிராமணர்களுக்கு குடும்பம் உருவாக்கிக் தந்ததே ஆகும். வட நாவலந்தேயம் வந்தபிறகும்கூட, தொடக்கத்தில், கணபதி என்கிற கூட்டத்தின் தலைவனுக்கு கட்டுபட்டு வாழ்ந்திருந்த பிராமணர்களுக்கு, ஒருவனுக்கு ஒருத்தி என்கிற குடும்பக் கட்டமைப்பைக் கற்றுக்கொடுப்பது, அவர்களை மணந்த தமிழ்பெண்களுக்கு பெரும்பாடாற்றலாக இருந்தது. இந்தப் பாடாற்றலுக்கு, ஐவருக்கு ஒருத்தியாக வாழவேண்டிய கட்டாயத்திற்கு பிரமாணர்களால் தள்ளப்பட்டதற்கு பாரதக்கதையின் குந்தியும் பாஞ்சாலியும் சான்றுகள் ஆகும். பிராமணர்களுக்கு- ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பாடாற்றலை கற்றுக்கொடுத்த தமிழ்ப்பெண்கள் மீது, 'நீ அதில் உண்மையானவளா' என்றே பிராமணர் வினா எழுப்பியிருந்ததை, தீயில் இறங்கி பிராமணர்கள் சோதனைக்கு பலியான, இராமயணத்தின் சீதை சான்றாக நிற்கிறாள். கணபதிகளிடம் இருந்து பிரித்து, பிராமணர்களுக்குக் குடும்பத்தைக் கற்றுக்கொடுக்க, தமிழ்ப்பெண்கள் பெரும்பாடாற்றியிருந்தது போலவே, அவர்களின் எழுதாக் கிளவியான பிராகிருதத்திற்கு இலக்கணம் வகுத்துக் கொடுக்கும் முயற்சியிலும் பெரும்பாடாற்றியிருந்தனர் தமிழ்பெண்கள். அந்த வகைக்கு பெருஞ்சான்றாவணம் ஆவார் தமிழ்ப்பெண் பாணினி. பாணினிக்கு ஒரு பிராமணரை மணந்து கொண்ட காரணம் பற்றி, அவரின் கணவர் சார்ந்த பிராமண இனத்தின் எழுதாக்கிளவி மொழியான பிராகிருதத்திற்கு எழுத்து அமைக்க வேண்டிய தேவையும், பிராகிருத மொழியைச் செழுமைப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்தது. பிராகிருதத்தை செழுமைப் படுத்த முன்னெடுத்த பாணினியின் முயற்சி, பிராகிருதம் பல கிளை மொழிகளை பெற்றெடுத்துவிட்ட நிலையில், அவரின், அவரோடு ஒத்துழைத்த பிராகிருத அறிஞர்களின் தனித்துவ முயற்சியாக சமஸ்கிருதம் என்கிற செயற்கைமொழி தோன்றக் காரணம் ஆனது. முகலாயர்களின் வருகைக்குப்பின், முகலாயர்களின், அடாவடிஆட்சி அதிகாரத்தால், பிராகிருதத்தின் பல்வேறு கிளைமொழிகள் உருதுச்சொற்களை மிகப்பேரளவாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின. சமஸ்கிருத எழுத்துக்களில் எழுதப்படுகிற உருது மொழியாக ஹிந்தி என்கிற ஒரு புதுமொழி மிக அண்மைக்காலமான ஐநூறு ஆண்டுகளுக்கு முன் கட்டமைந்தது. தங்களை ஆதிக்க அடாவடி இனமாகத் தக்கவைத்துக்கொள்ள பிராகிருதம், சமஸ்கிருதம், ஹிந்தி என்கிற மூன்று மொழிகளைப் பேணிக்காக்க வேண்டியதும், இந்தியாவின் அனைத்து இனங்களின் மீதும் திணிக்க வேண்டியதும், பிராமண இனத்திற்கான கட்டாயமாக இருக்கிறது. பிராமண இனத்தின் காவலர்களாக வளர்ந்து வருகிற பாஜகவிற்கு இந்தக் கட்டாயம் இருப்பதாலேயே மூன்று மொழிகளுக்கும் முட்டுக்கொடுக்க வேண்டிய பாடற்றலில் இயங்கி வருகிறது. பாஜக ஹிந்தியை மற்ற மொழியினங்களின் மீது திணிப்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிவோம். சமஸ்கிருதத்தைக் கொண்டாடி இருப்பதையும் அந்த வகையாகவே அறிவோம். பிராகிருதத்திற்கும் அது தொண்டாற்றுகிறது பின்வரும் தகவல் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 'மத்திய இந்தோ - ஆரிய மொழிகளின் வரிசையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராகிருதம், இந்தியாவின் வளமான மொழியியல், கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த பண்டைய மொழி பல நவீன இந்திய மொழிகளுக்கு ஒரு அடித்தளமாக செயல்படுவது மட்டுமல்லாமல், துணைக் கண்டத்தின் வரலாற்றை வடிவமைத்த பல்வேறு மரபுகள், தத்துவங்களை உள்ளடக்கியது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மராத்தி, பாலி, அசாமி, பெங்காலி மொழிகளுடன் பிராகிருத மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க 2024 அக்டோபர் 03 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. பிராகிருதத்தின் வரலாற்று முக்கியத்துவம்: பிராகிருத மொழியின் தொன்மை மொழியியலாளர்கள், அறிஞர்களிடையே பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பாணினி, சந்த், வரருச்சி, சமந்தபத்ரா உள்ளிட்ட புகழ்பெற்ற ஆச்சார்யர்கள் அதன் இலக்கண கட்டமைப்பை வடிவமைத்துள்ளனர். பிராந்திய இலக்கியத்தில் பிராகிருதத்தின் பதிவுகள் தெளிவாகத் தெரிகின்றன. பிராகிருத மொழி இந்திய மொழியியல், பேச்சு வழக்குகளைப் புரிந்து கொள்வதற்கு அடித்தளமாக இருப்பது மட்டுமல்லாமல், வளமான பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது. பிராகிருத கல்வெட்டுகள் முக்கியமான வரலாற்று பதிவுகளாக செயல்படுகின்றன. அவை இந்தியாவின் கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன. மௌரியருக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள், அசோக மன்னர், கார்வெல் ஆகியோரின் கல்வெட்டுகள் முதன்மையாக பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. பிராகிருத மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க கலாச்சார, வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பண்டைய இந்திய நாகரிகத்தின் போது செழித்து வளர்ந்த பிராகிருத மொழிகள், இந்தியாவின் வளமான இலக்கிய பாரம்பரியத்திற்கு, குறிப்பாக சமண மற்றும் பௌத்த நூல்களின் பகுதிகளுக்கு ஒரு முக்கிய இணைப்பாக செயல்படுகின்றன. இந்த அங்கீகாரம் பிராகிருதத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்வது மட்டுமல்லாமல், பண்டைய தத்துவங்கள், கலாச்சாரம், கலை வெளிப்பாடுகளை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாக அதன் அந்தஸ்தை உயர்த்துகிறது. பிராகிருதத்தை ஊக்குவிப்பதன் மூலம், பழங்கால இலக்கிய மரபுகளைப் பாதுகாத்து புத்துயிர் பெறுவதையும், இந்தியாவின் மாறுபட்ட மொழியியல் மொழியியல் சூழலைப் பற்றிய சமகால புரிதலை வளப்படுத்துவதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது' பிராமணர்களில் ஒற்றைத்தமிழச்சி என்னுடைய மூலமொழி தமிழே என்று உணரத்தலைப்பட்டால், இந்திய வரலாறும், உலக வரலாறும் தலைக்கீழாக மாறும் என்பதைப் பிராமண அடிப்படைவாதிகள் தெளிவாகப் புரிந்திருக்கிற காரணம் பற்றியும், அது நிகழ்ந்து விடக்கூடாது என்கிற காரணம் பற்றியுமே, அவர்கள் பிராமணியத்தைத் தக்கவைத்துக்கொண்டு, பிராமணிய இனத்தை, இந்தியாவின் ஆதிக்க இனமாக பேணியிருப்பதற்கு ஹிந்தியோடு, சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியையும் பேணிடத் தலைப்படுகிறார்கள்.
1. கிழமை: செவ்வாய்
2. நாள்: 17
3. மாதம்: பங்குனி
4. தமிழ்த்தொடராண்டு: 5127
5. தமிழ்த்தொடர்நாள்: 1872547
பிராமணியத்தைக் கொண்டாடியிருக்கும், இன்றுவரை பிராமணர்கள் ஏற்காத பார்ப்பனர்கள் அனைவரும் தமிழினத்தவரே.



