நிமிர் சிறப்பு கவியரங்கத்தில், 'வெட்கத்தில் சிவந்த வானம்' எனும் பொதுத் தலைப்பில் நான் படித்த கவிதை. நடப்பில்,  நிமிர் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் பாபுசசிதரன் உள்ளிட்ட ஆளுமைகளுக்கும், கவியரங்க நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த அமெரிக்கவாழ்தமிழர் குருமூர்த்தி பாலகிருட்டிணன் ஐயா அவர்களுக்கும் குமரிநாடன் ஆகிய என்னை ஆசிரியராகக் கொண்ட மௌவல் செய்திகள் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.
வானம் குறித்து பேசிக் கொண்டிருக்கிற அத்தனை  செய்திகளும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள் மார்க்சியம் 
ஆகிய அயல்களின் பெரும்புனைவுகளே
முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில் வானமே இடம்.
தனி ஒன்றுகளில் தொடங்கி 
நிலம் நீர் தீ காற்று என்கிற நான்மறைகள் ஆகி
அந்த நான்மறைகளின் உள்ளடக்கத்தோடு 
உலகினரும், நீங்களும், நானும் உருவானோம், 
காலத்தின் கிளவியாக்கமாக.
நாம் அனைவரும், 
நம் தமிழில் கேட்கிற அத்தனையையும் 
கொடுக்கிற போது, 
அந்த வானம் கடவுள் ஆகிறது. 
என்று தெளிவுபடுத்தியுள்ளனர் தமிழ்முன்னோர்,
ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில்.
‘எனக்கு ஒரு காதலி தருக மணம் புரிந்து கொள்ள’ 
என்று கேட்டாலும்,
வெட்கத்தில்சிவந்து, வானம் என்கிற கடவுள் 
கட்டாயம் கொடுக்கும்.
தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை
மந்திரம் படியுங்கள்.
உங்கள் தேவைகள் அனைத்தையும் வானம் என்கிற கடவுளிடம் கேட்டுப்பெறுங்கள்.
வாழ்த்துக்கள்!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.

                                            

