Show all

தமிழியல்: உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போக

நீங்கள் ஒற்றைத் தமிழனாக, தமிழியலில் அறிவார்ந்த நிலையில் இயங்க முயன்றால், உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போகும் என்பது தமிழியலில் தமிழ்முன்னோர் நிறுவிய உறுதியான உண்மை ஆகும். என்கிற தெளிவுக்காக உருவாக்கபட்டது இந்தக் கட்டுரை.

26,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5127: 

பிராமணர் வருகைக்குமுன்பு நாவலந்தேயமாக இருந்து, இன்று இந்தியாவாக அறிப்படுகிற மண்ணில், வாழ்ந்த அத்தனை பேர்களும், அறிவார்ந்தநிலையில், தமிழியலில் மட்டுமே இருந்தார்கள். தமிழ் என்கிற ஒற்றைமொழி மட்டுமே நாவலந்தேய இந்தியாவில் இருந்தது.

பிராமணர் வருகைக்குப் பிந்தைய கடந்த 3500 ஆண்டுகளாக, ஒற்றைத் தமிழனும், அறிவார்ந்தநிலையில், தமிழியலில் இருப்பதாக அறியக்கிடைக்கவில்லை.

கடந்த 3500 ஆண்டுகளாகத் தோன்றிய அத்தனைத் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புகளிலும், கட்சிகளிலும், இலக்கியம், கல்வி உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களிலும் பிராமணிய ஆதரவாளர்களாகவோ, பிராமணிய எதிர்ப்பாளர்களாகவோதாம் உலா வருகின்றார்கள்.

பிராமணியத்தை மலைத்து, தமிழியலில் இருந்து வெளியேறிய தமிழர்களால் உருவாக்கப்பட்டவைகளே நடப்பில் இந்தியாவில் இருக்கிற இத்தனை மொழிகளும், மொழியினங்களும்.

பிராமணியத்தை மலைத்து, தமிழியலில் இருந்து வெளியேறினாலும், சிலர் தமிழைப் பேச்சு மொழியாகவும், சிலர் தமிழைக் கல்விமொழியாகவும், சிலர் தமிழாலேயே பிராமணியத்தைக் கொண்டாடியும் வருகின்றனர்.

சிலர் நேரடியான பிராமணிய எதிர்ப்பிலும், சிலர் அராபிய ஆதரவுத்தளத்தில் இருந்து கொண்டு பிராமணிய எதிர்ப்பிலும். சிலர் ஐரோப்பிய ஆதரவுத்தளத்தில் இருந்து கொண்டு பிராமணிய எதிர்ப்பிலும், சிலர் வேறுவேறு மதங்களின் ஆதரத்தளத்தில் இருந்துகொண்டு பிராமணிய எதிர்ப்பலும், சிலர் மார்க்சியத் தலைப்பில் இருந்து கொண்டு பிராமணிய எதிர்ப்பிலும் இயங்கி வருகின்றனர். தமிழ்நாட்டின் தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள், கல்விநிறுவனங்கள் அனைத்தும் அவ்வாறாகவே இயங்கி வருகின்றன.

நீங்கள் ஒற்றைத் தமிழனாக, தமிழியலில் அறிவார்ந்த நிலையில் இயங்க முயன்றால், உங்கள் முன்னேற்றத்திற்கான எல்லை விரிந்துகொண்டே போகும் என்பது தமிழியலில் தமிழ்முன்னோர் நிறுவிய உறுதியான உண்மை ஆகும்.

ஏனென்றால்: தமிழியல், கடவுளில் இயங்குவது பற்றியான, தோன்றிய இடத்திலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என  நிலந்திருத்தி வாழ்ந்த, நிலைத்த வாழ்க்கையில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த அறம். 

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் ஆகியன, ஆற்றக்கரை தேடி அலைந்த நாடோடி வாழ்க்கையில், சில தனிமனித வழிகாட்டிகளுக்கு கிடைத்ததும், நடப்பில் உலகினர் பேரளாவாகப் பின்பற்றி வருவதும், மனிதனில் இயங்குவது பற்றியான முனைப்பு ஆகும்.

தனிமனித வழிகாட்டிகளின் முனைப்பில் இயங்குகிற ஒவ்வொருவரும் வாழ்நாள் முழுவதும் போராடியே ஆக வேண்டும்.

ஏனெனில்: கடவுளில் இயங்குவது இயக்கமின்மையின் மீது இயங்குகிற சீரான இயக்கம். மனிதனில் இயங்குவது இயக்கத்தின் மீது இயங்குகிற தாறுமாறு இயக்கம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,72,526. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.