கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மை. இந்த உண்மையை அடிப்படையாகக் கொண்ட பலவகையான புனைவுகளே இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், ஆரா, அமானுஷ்ய சக்தி என்பவைகள். அதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை. கிழமை: ஞாயிறு கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்பது உண்மை. கடவுளிடம் நம் முன்னேற்றத்தேவைகளை எப்படிக் கேட்பது என்பது தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். உலகினர் இதை நேரடியாக அறியமாட்டாமல், சில பல சடங்கின் மூலம் சாதிக்க முடியும் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர். கடவுளிடம் எது கேட்டாலும் கிடைக்கும் என்றால், நம்முடைய தலையெழுத்தை நாம்தாமே எழுதிக் கொள்கிறோம் என்று நிறுவும் முயற்சியில் தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலையாக உருவாக்கியதே மந்திரம். உலகினர், கடவுள் குறித்தோ, முதலெனப்படுவது இடமும் காலமும் என்பதில் இடம்: கடவுள். காலம்: நீங்கள் நான் உள்ளிட்ட இயற்கையின் அனைத்தும் என்பது குறித்தோ அறிய மாட்டார்கள். உலகினர், இயற்கைக்குப் புறத்தே அமைந்த, எதை வேண்டுமானாலும் உருவாக்க வல்ல ஒரு படைப்பாளியை முதல் என கருதியுள்ளனர். அந்தப் படைப்பாளி நம்மை உருவாக்கவும் அழிக்கவும் வல்லது. அந்தப் படைப்பாளியிடம், கேட்டால் கிடைப்பதற்கு நமக்குள் ஆரா, அமானுஷ்ய சக்தி போன்ற ஆற்றல்களை உருவாக்கிக் கொள்ள வழி இருப்பதாக சடங்கின் மூலம் ஒரு கடவுள்கேட்பை உருவாக்கி உங்களுக்கு கொஞ்சமாக பயனளித்து அவர்கள் பேரளவாக பயன்பெற்று வருகிறார்கள் வழிகாட்டிகள். கடவுளிடம் எது கேட்டாலும் கிடைப்பதுதான் இயற்கையின் அடிப்படை. கடவுளை வழிகாட்டிகள் அறியமாட்டார்கள். வழிகாட்டிகள், தங்கள் மூலமாக மட்டுமே, அவர்கள் வழிபாட்டு மூலமாக கொண்டாடியிருக்கிற தெய்வத்திடம் கேட்கமுடியும் என்று பிழையாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம், என்பன, ஒருவரின் மனதையும், சிந்தனையையும் குழப்பி, அவரின் செயலை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு பயன்படும் என்று கருதி உலகினர் பகுதியாகப் பயன்பெற்று வருகிறார்கள். இவை அனைத்தும் நெய்தல்திணை இறைக்கூறு தெய்வம் வருணனின் மாட்சியைக் கடவுளிடம் வேண்டுவதற்கான தொடர்பாற்று மந்திரம் என்கிற தலைப்பிற்கு உரியது ஆகும். வேண்டுவது என்கிற சொல்லிலேயே- வேண்டாமையைக் கடவுளிடம் கேட்டுப்பெறவோ, வேண்டாமைக்குக் கடவுள் பாடாற்றவோ அமைப்பு இல்லை என்கிற பொருள் தமிழ்முன்னோரால் பொதிக்கபட்டுள்ளது. அனால் இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் அனைத்தும் வேண்டாமையைக் கடவுளிடம் திணிக்கிற போக்கிற்கானது. இந்த வேண்டாமைச் சடங்குகளில் சில வேண்டல்கள் உள்ளீடாக அமைந்திருந்தால் அவற்றை கடவுள் ஒருங்கிணைத்து விடும். அந்த ஒருங்கிணைப்புப்பயனை, சடங்கின் முழுப்பயனாகக் கருதி, உலகினர் கொண்டாடி வருவதால் பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் என்கிற இந்தத் தவறான கருதுகோள்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இயக்கமின்மையில்தான் சீரான இயக்கம் கிடைக்கும் என்பதை, 'இயக்கமின்மையே சீரான இயக்கத்திற்கான அடிப்படை' என்கிற கட்டுரையில் நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லவா! பெற்றோர், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், நட்பு, உறவுகள், சொந்தபந்தம், நாம் ஈடுபட்டிருக்கும் அமைப்பு, கட்சி, நிறுவனம் ஆகியவற்றில் ஒன்றின் இயக்கமின்மையை என்னுடைய சீரான இயக்கதிற்குப் பயன்படுத்;திக் கொள்வதற்கு உரிய கடவுள் கேட்பே தொடர்பாற்று மந்திரம் ஆகும். நாம் தொடர்ந்து வளர்வதற்கும், ஒவ்வொருவரும் புத்தியல் உருவாக்குவதற்கும், நமக்கான காலக்கெடு முடிகையில் நாம் அடிப்படையாகப் பிரிவதற்கும் என்கிற மூன்று வகைக்கு மட்டுமே கடவுளால் நம்மை முயக்க முடியும். இறத்தல் காலமாதலிலும், பெருவெடியில் மட்டுமே- நாம் அடிப்படையாகப் பிரிவதற்கு, கடவுளால் நம்மை முயக்கமுடிகிறது. இது அழித்தல், கெடுத்தல், தடைபடுத்தல், தண்டித்தல் என்கிற நடவடிக்கை அல்ல என்று தமிழ்முன்னோர் மட்டுமே- தெளிவாக நிறுவியுள்ளனர். வேண்டாமைகளைப் பட்டியல் இடுவது, அவைகளைக் கெடுப்பது, தடைபடுத்துவது, தண்டிப்பது ஆகியவற்றில், உலகினர் முன்னெடுக்கும் பாகுபாடு, முரண்பாடு என்கிற கோட்பாடுகள் அடிப்படையில், நீங்களே, நேரடியாக பாடாற்றி தாறுமாறாக இயங்கலாமே அன்றி, அந்த வகைக்கு, கடவுள் உங்களை முயக்க முடியாது. கடவுளைப் படைப்பாளியாக உருவகித்து அந்தப் படைப்பாளியால் முடியும் என்று கருதும் வகையான பாடாற்றல்களே இந்த பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் என்பன. உலகினரின் பொய்யான கருதுகோளில் உலாவரும் பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகப் பாடாற்றல்கள்: மிகவும் கொடூரமான மாந்திரீக முறை என்றால் அது செய்வினை. ஒருவரை பிடிக்க வில்லை என்றால் அவர் எல்லா வழிகளிலும் கெட்டு, அழிந்து போக செய்யப்படுவது இந்த செய்வினை. ஏவல் என்றால் என்ன? வசியம் என்றால் என்ன? சூனியம் எப்படி வைக்கப்படுகிறது? இப்படி ஒருவரை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும், அவரின் விருப்பப்படி ஆட்டுவிப்பது தான் பில்லி, ஏவல், சூனியம் போன்ற மாந்திரீக விஷயங்கள். இதுகுறித்து தற்போது பல்வேறு திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில் காட்சி அமைக்கப்பட்டும் வருகின்றன. ஒரு மனிதனை வீழ்த்துவதற்காக, அழிப்பதற்காக அவரின் முடி, காலடி மண், ஆடை, அணிகலன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி சூனியம் வைக்கப்படுகிறது. யார் ஒருவர் அடிக்கடி முறையாக குலதெய்வ வழிபாடு மேற்கொள்கிறாரோ, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வழிபாடு, காமாஷி வழிபாடு செய்து வருகிறாரோ அவருக்கு எந்த ஒரு மாந்திரீக சக்தியும் எதுவும் செய்ய முடியாது. காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பவருக்கு, யோகா, தியானம் செய்பவர்களுக்கு ரத்த சொந்தம் இல்லாத மற்ற இடங்களில் சாப்பிடாதவர்களை வசியப்படுத்த முடியாது. யார் ஒருவர் இறைவழிபாடும், மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியவராக இருப்பவரை மனோவசியம் செய்ய முடியாது. ஜாதகத்தில் குரு ஆதிக்கம் நிறைந்தவரிடமும், வேதம் ஓதுபவர்களிடமும் மாந்திரீகம் பலன் அளிக்காது. இவர்களை மாந்திரீகத்தால் வசியப்படுத்த முடியாது என்பன உலகினரின் கருதுகோளாக இருந்து வருகிறது. தமிழ்முன்னோர் நிறுவிய தொடர்பாற்றல் மந்திரத்தின் உறுதியான, முழுமையான பாடாற்றல்: ஒருவரின் கணவர் குடிகாரராக இருக்கிறார் என்கிற போது அவரைத் திருத்த, (இயக்கமின்மையாகப் பயனாற்ற) பாகுபாடு, முரண்பாடு என்கிற தாறுமாறு இயக்கம் பயன் அளிக்கா நிலையில்- அவரைத் திருத்துவதற்கு அவரின் மனைவி வேண்டுகிற கடவுள் கேட்பே தொடர்பாற்று மந்திரம் ஆகும். அவரின் குடியால், மனைவியின் உடல்நலம், மனமகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பு அனைத்தும் கெடுகிற, வேண்டாமைகளை கடவுடளிடம் பட்டியல் படுத்தாமல், அவற்றின் எதிர்நிலையாக மனைவியின் உடல்நலம், மனமகிழ்ச்சி, பொருளாதார முன்னேற்றம், பயணஉதவி வண்டிகளில் பாதுகாப்பு அனைத்தும் அவரின் மூலமாகக் கிடைக்கும்வகைக்கு வேண்டிப் பெறும் காரணத்திற்கானது தொடர்பாற்று மந்திரம். கடவுளே! இந்தத் தொடர்பாற்று மந்திரத்தை அன்றாடம் பலமுறை ஓதியிருக்க, உங்கள் கணவரை உங்கள் சீரான இயக்கத்திற்கான உறுதியான இயக்கமின்மையாக கடவள் உறுதியாக மாற்றித்தரும். இப்படி உங்களின் எந்தத் தொடர்பின் வேண்டாமைகளையும் முற்றாகக் களைந்திட எதிர்நிலையில் உங்களுக்கான வேண்டுதலுக்கு மந்திரம் கட்டி அன்றாடம் ஓதி வந்தால் உறுதியாகப் பயன்பெறலாம். நீங்கள் யாரையாவது கெடுக்கவும், உங்களை கெடுக்க யாராவதும் முன்னெடுப்பதாகச் சொல்லப்படுகிற பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் என்பனவற்றை கடவுளால் முயக்க முடியாது என்பது உறுதியான உண்மை. உங்களுக்கு யாராவது பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் என்பனவற்றை முன்னெடுத்துவிட்டதாக கருதும் உங்கள் கணிப்பிற்கு கடவுளால் உங்களை முயக்கமுடியும். ஆக பில்லி, சூன்யம், ஏவல், வசியம், செய்வினை, மாந்திரீகம் என்பனவற்றை உங்களுக்கு நீங்களே வைத்துக் கொள்ள, கடவுளால் உங்களை முயக்க முடியும் என்பதும் உண்மை. கடவுளால் நிலம், நீர், தீ, காற்று என்கிற நான்மறைகளை உங்கள் வளர்ச்சிக்கு, உங்களின் ;புத்தியல் உருவாக்கத்திற்கு, உங்களின் காலக் கெடு முடிகையில் உங்களின் இறத்தலுக்கும் காலமாதலுக்கும் ஒருங்கிணைக்க முடியுமே அன்றி உங்களை அழிக்க, கெடுக்க, தடுக்க, தண்டிக்கவெல்லாம் முடியவே முடியாது என்பது தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவிய உறுதியான உண்மை ஆகும். இலர்பல ராகிய காரணம் நோற்பார்
நாள்: 07
மாதம்: கார்த்திகை
தமிழ்த்தொடராண்டு: 5127
தமிழ்த்தொடர்நாள்: 1872537
ஒருவர் விரும்பாத செயலை அவரையே செய்யத் தூண்டுவது தான் ஏவல். மாந்திரீகமாக புஜை செய்யப்பட்ட பொருளை அந்த நபருக்கு கொடுத்து இந்த ஏவல் முறை செய்யப்படுகிறது.
ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர செய்யப்படுவதே வசியம்.
மந்திரிக்கப்பட்ட ஒரு பொருளை தனக்கு பிடிக்காத ஒரு நபரின் இடத்தில் வைத்து அவரை அழிக்க நினைப்பதற்கு வைப்பு எனப்படுகிறது.
விசும்புதெய்வமே!
எனக்கு-
நெய்தல்திணை இறைக்கூறு தெய்வத்தின் மாட்சிக்குரிய தொடர்புகளில் ஒன்றான என் கணவரின் மூலமாக-
குறிஞ்சித்திணைக் கடவுள்கூறுதெய்வம்
சேயோனின் மாட்சிக்குரிய
உடல் நலத்தையும்
முல்லைத்திணை இறைக்கூறுதெய்வம்
மாயோனின் மாட்சிக்குரிய
மன மகிழ்ச்சியையும்
மருதத்திணை இறைக்கூறுதெய்வம்
மன்னனின் மாட்சிக்குரிய
பொருளாதார முன்னேற்றத்தையும்
பாலைத்திணை இறைக்கூறுதெய்வம்
கொற்றவையின் மாட்சிக்குரிய
பயண உதவி வண்டிகளில் பாதுகாப்பையும்
வழங்கி ஆவன செய்ய வேண்டுகிறேன்.
கடவுளே!
விசும்புதெய்வமே!
அருள் செய்க.
சிலர்பலர் நோலா தவர்.
உங்கள் தேவையைக் கடவுளிடம் எப்படிக் கேட்பது என்பது மந்திரம். அந்த மந்திரத்தைத் தொடர்ந்து ஓதியிருப்பது நோற்றல் என்கிற தவம்.



