Show all

தொடரும் மீட்புப் பணிகள்- மக்கள் கதறல்- அரசு நட்பு நாடுகளிடம் உதவி வேண்டுகோள்! லெபனான் துறைமுகத்தில் வெடிபொருட்களால் விபத்து

லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 30 பேர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: லெபனானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் முதல்கட்டமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த பயங்கர விபத்து பெய்ரூட் நகரம் முழுவதும் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்தது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்தன. பல கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரமே புகைமூட்டமாக காணப்படுகிறது.

துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் முதல்கட்டமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதையடுத்து சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வெடிவிபத்து 2 முறை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட துறைமுகத்தில் தற்போது தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.

இந்த விபத்தில் தற்போதுவரை 30 பேர்கள் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான அவசர அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து காரணமாக லெபனானில் நாளை தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்புக் குழுவை உடனடியாக கூட்டியுள்ளார்.

மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட ஒரு கோடிக்கும் குறைவாக மக்கள் தொகையைக் கொண்ட லெபனான் நாடு பிரான்சிடமிருந்து விடுதலை பெற்று குடியரசு நாடாகத்திகழ்ந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.