கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 20,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனாவுக்கு உயிரிழக்கும் மருத்துவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கையில் தமிழகத்தில்தாம் குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் தமிழக மருத்துவர்கள் உயிரைக் கொடுத்து தமிழகத்தில் கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது நெஞ்சை வலிக்கச் செய்கிறது. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 44 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதில் 20 பொது மருத்துவர்களும் 24 சிறப்பு மருத்துவர்களும் அடங்குவர்.
4அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 4குழந்தைகள் சிறப்பு மருத்துவர்கள், 24 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தமிழகத்தில் தான் மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.