Show all

5128வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

5128வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.

01,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5128: தற்பரை என்பது தமிழர் காலக் கணிப்பின் மிக நுட்பமான கால அளவாகும். ஒரு தற்பரை என்பது, பரை என்கிற இசைக்கருவியை ஒரு கொட்டு கொட்டும் போது எழுகிற அதிர்வுகளின் ஒற்றை அதிர்வு நேரமாகும். அறுபது பரை நேரத்தை ஒரு விநாழிகை என்றும் அறுபது நாழிகை நேரத்தை ஒரு நாள் என்றும் தமிழர் நாளுக்கான காலக் கணக்கை கணித்திருக்கின்றனர். 

ஞயிறே பருவகாலத்தின் அடிப்படை என்றும், அதனால் ஞாயிற்றுக்கும் நமது புவிக்குமான ஒரு சுழற்சியை ஒரு ஆண்டு என்றும் தமிழர் கணித்தனர். 5127 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியாக ஆண்டுக்கான காலக்கணக்கை 15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்கள் கணக்கிட்டனர். 

நடப்பு 5127வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான '15 தற்பரை 31 விநாழிகை 15 நாழிகை 365 நாட்களானது' இன்று காலை ஞாயிறு தோற்றத்தில் இருந்து 9வது நாழிகை 2வது விநாழிகை 02வது தற்பரையில் (காலை 9.39க்கு) முடிகிறது. 

அதனால் அடுத்துவரும் 5128வது தமிழ்த் தொடர் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு இன்று காலை ஞாயிறு தோற்றத்தில் இருந்து 9வது நாழிகை 2வது விநாழிகை 02வது தற்பரையில் பிறக்கிறது. தமிழர் நாள் தொடக்கம் காலை ஆறு மணி என்பதால், தொடர் ஆண்டுக் கணக்கின் 5128வது தமிழ்ப் புத்தாண்டை இன்று காலை ஆறு மணிக்கு ஞாயிறு தோற்றத்தில் கொண்டாடலாம். காலை 9.39 வரை காத்திருக்கத் தேவையில்லை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.