Show all

சைகை வேண்டுமாம்! கர்நாடகம் போல் இழுபறி தேவையில்லை; மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணிநேரங்களில் கலைத்துவிடலாமாம்

பா.ஜனதா தலைமையின் எண்-1, எண்-2 சைகை கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறியுள்ளார் கோபால் பார்கவா.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரங்களில் கலைத்துவிடலாம், தலைமையின் சைகைக்காக காத்திருக்கிறோம் என பா.ஜனதா தலைவரும், அம்மாநில சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கோபால் பார்கவா கூறியுள்ளார்.

பா.ஜனதா தலைமையின் எண்-1, எண்-2 சைகை கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறியுள்ளார் கோபால் பார்கவா.

கடந்த ஆண்டு மாநில சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 114 தொகுதிகளிலும், பா.ஜனதா 109 தொகுதிகளிலும் வெற்றிப்பெற்றது. பகுஜன் சமாஜ் மற்றும் சில சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் உதவியுடன் அங்கு காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,225.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.