சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற தமிழர் திறத்தையும், உதட்டில் புன்னகையோடு முதுகில் குத்துகிற பாஜக கோழைத்தனத்தையும் ஒப்பிட்டு, ‘இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் ஹிந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்’ என்று எச் இராஜா பெருமிதம். 09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோ பேக் மோடின்னு சொல்லி கருப்பு பலூன் விட்டவர்கள், இந்தியத் தலைமைஅமைச்சரைச் சந்திக்கும்போது இன்முகத்துடன் வரவேற்றுள்ளார் மோடி என்று எச்.இராஜா பெருமிதம். இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் ஹிந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்று வைகோவை தாக்குவதாக நினைத்துக் கொண்டு, எச்.இராஜா கீச்சு. வைகோ நாவை அடக்க வேண்டும், வைகோவை, சாகும்வரை சிறையில் தள்ள வேண்டும் என்ற வாசகங்கள் எல்லாம் எச்.இராஜா கடந்த காலங்களில் வைகோவை பார்த்து உதிர்த்தவை. சில நாட்களுக்கு முன்பு வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினராக வாய்ப்பு தந்தபோதுகூட ‘வைகோ அவர்கள் தேசவிரோதி என்பது குற்றச்சாட்டோ, விமர்சனமோ அல்ல. அறங்கூற்றுமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவர் மாநிலங்களவை உறுப்பினரா? வெட்கம்’ என்று பதிவிட்டவர் இந்த எச்.இராஜா. 23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினராகி இருக்கும் மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமைஅமைச்சர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘தலைமைஅமைச்சர் மோடியையும், அவரது அரசையும் கடுமையாக விமர்சித்து வருபவன் நான். அவர் என்னை அன்போடு வரவேற்றார். மோடி என்னிடம், நீங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய நபராக இருக்கிறீர்கள் என கூறினார். அதற்கு நான் கொள்கையின் அடிப்படையிலேயே இவ்வாறு செயல்படுகிறேன் என்றேன்’ என்றார். பணமதிப்பு அழிப்பு, ஹிந்தித் திணிப்பு, சரக்கு-சேவைவரி, நீட், மேல்தட்டு மக்களுக்கு பத்து விழுக்காடு இட ஒதுக்கீடு, தமிழகத்தை வட இந்தியர் மயமாக்கல், மீத்தேன், நியூட்ரினோ என்று ஆயிரம் வகையாக தமிழர்கள் முதுகில் குத்தும் பாஜக அரசு, அந்த அரசின் தலைமைஅமைச்சர் மோடி இன்முகத்தோடு வைகோவை வரவேற்றாராம். ஆனால் மோடிக்கு வைகோ கருப்பு பலூன் காட்டினாராம். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கிற தமிழர் திறத்தையும், உதட்டில் புன்னகையோடு முதுகில் குத்துகிற பாஜக கோழைத்தனத்தையும் ஒப்பிட்டு, ‘இதுதான் பெரியாரிஸ்டுகளுக்கும் ஹிந்துத்துவ வாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்’ என்று எச் இராஜா பெருமிதம் கொள்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,224.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



