நேற்று மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட மாநில காவல்துறையினரின் அதிரடிப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 15 காவலர்கள் கொல்லப்பட்டனர். ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார். 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் சத்தீஸ்கரின் பஸ்டர் மாவட்டத்தில், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், மாநில காவல்துறையினரின் அதிரடிப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 15 காவலர்கள் கொல்லப்பட்டனர். ஓட்டுனரும் உயிரிழந்துள்ளார்.
நக்சல்கள் இன்றும் அதிகாலை 3.30 மணியளவில் கட்சிரோலி மாவட்டம் குர்கேடாவில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களை, மண்ணெண்ணை, டீசல் ஊற்றி தீவைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அதிரடிப் படை வீரர்கள் அதிரடியாக மாவோயிஸ்ட்கள் மீது தாக்குதல் நடத்தினர். அதில் 40 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று வீரர்கள் மீது மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அண்மைக் காலமாக, கீச்சுவில் தங்களை காவல்காரர்களாக அழைத்துக் கொள்கிற பாஜகவினர் ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தில். இப்படி ஆளும் அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இழுபறியாக இருந்து வரும் போரை முடிவுக்கு கொண்டுவர முடியாத கீச்சுக் காவல்காரர்களாக இருந்து வரும் பாஜகவினர் மீது மகாராஷ்டிரா மாநில மக்களும், எதிர்கட்சியினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



