Show all

எதிர்கட்சிகள் ஐயம்! 'ராபேல் ஆவணங்கள் எரிந்து விட்டன' என்று தெரிவிப்பதற்கான நாடகமா? டெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீ விபத்து

நடுவண் அரசு அலுவலகங்கள் இயங்கி வரும், டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில், 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தா? ரபேல் ஆவணங்கள் கருக்கும் நாடகமா? எதிர்கட்சிகள் கேள்வி.

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் நடுவண் அரசின் ஏராளமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல்வேறு அமைச்சக நிறுவனங்கள் இயங்கி வரும் இந்த 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது சில நிமிடங்களில் மேலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் 8 வாகனங்களில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வேகமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப் பட்டுள்ளது. தீ விபத்தில் சேதாரமான பொருட்கள் குறித்தும், விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
ரபேல் வழக்கு உள்ளிட்ட ஆவணங்களை அழிப்பதற்காக இந்த தீ விபத்தை நடத்தி இருப்பதாக ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர். ஆனால் பாஜக, இது நாடகம் எல்லாம் இல்லை தற்செயலாக நடந்ததுதான் இந்த விபத்து என்று தெரிவித்து உள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,139.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.