அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு இலங்கை தற்போது பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு தடை செய்துள்ளது. இந்தத் தடை உலகின் முதலாவது அல்ல. 19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு இலங்கை தற்போது பாதுகாப்பு காரணத்தை முன்னிட்டு தடை செய்துள்ளது. இது போன்று வேறு எந்தெந்த நாடுகளில் அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடைகளுக்கு தடையுள்ளது என்கிற கேள்வி பொது அறிவு நோக்கமாக நம்முன் எழுகிறது இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது. பிரான்சில்தான் முதல்முதலாக எட்டு அண்டுகளுக்கு முன்பு அடையாளம் காண இயலாதவாறு முகத்தை மூடும் ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் டென்மார்க்கில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. நெதர்லாந்து நாட்டிலும் முகத்தை முழுமையாக மூடி அடை அணிவதை தடை செய்யப் பட்டது. பொது வீதிகளில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணியலாம். ஆனால்,பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது போக்குவரத்தில் பயணிக்கும் போது அவ்வாறு செல்ல முடியாது. ஜெர்மனியில் கார் ஒட்டும் போது முழுமையாக முகத்தை மூட கூடாது. ஆஸ்திரியாவில் பள்ளிகள், அறங்கூற்று மன்றங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. பெல்ஜியத்தில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. பெல்ஜியம் சட்டப்படி பொது இடங்களான பூங்காக்கள் மற்றும் வீதிகளில் முகத்தை மூடி ஆடை அணிய கூடாது. நார்வேயில் கல்வி நிலையங்களில் முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா இயற்றப்பட்டது. பல்கேரியா நாடாளுமன்றம் முகத்தை மூடி ஆடை அணியும் பெண்களுக்கு சலுகைகளை ரத்து செய்யும் சட்டத்தை இயற்றியது. ஆப்ரிக்காவில், சாட், கெபோன், கேமரூனின் வடக்கு பகுதி, நைஜரின் டிபா பகுதி மற்றும் காங்கோ குடியரசில் முகத்தை மூடி ஆடை அணிவது தடை செய்யப்பட்டது. அல்ஜீரியாவில் அரசு ஊழியர்கள் முகத்தை முழுமையாக மூடுவது தடை செய்யப்பட்டது. சீனாவில் சின்ஜியாங்கில் பொது இடங்களில் முகத்தை முழுமையாக மூடி ஆடை அணிவது, நீளமாக தாடி வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. முகமதியப்பெண்களிடம் புர்கா, நிகாப், ஹிஜாப், சடோர், சாய்லா, அல்அமிரா, கிமார் என்கிற பலவகையான முகம் மூடும் ஆடைகள் புழக்கத்தில் உள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,140.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



