Show all

நடிப்பு சௌக்கிதாருக்கு எதிராக, உண்மை சௌக்கிதார் களத்தில்! ஆம். மோடியை எதிர்த்து முன்னால் இராணுவ வீரர் தேர்தலில் போட்டி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை வைத்து வெற்றிப்புள்ளிகளை குவிக்க நினைத்த பாஜகவிற்கு, இம்ரான்கானின் பண்பாட்டு நடவடிக்கை, பயங்கர சறுக்கலைத் தந்தது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் எல்லாம் சௌக்கிதார் என்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றினார் மோடி. இந்த நிலையில் உண்மையான சௌக்கிதார் ஆன இராணுவ வீரர் மோடிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவித்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் ரேவரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்புப்படை வீரர் தேஜ் பகதூர் யாதவ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னம், ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, இராணுவத்தில் மேலதிகாரிகளின் மேலாதிக்கம் என்று காணொளி ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை உள்ளாக்கினார்.

தேஜ் பகதூர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், தற்போது தேஜ் பகதூர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களமிறங்குவதாக திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வாரணாசியில் உள்ள நூற்றுக்கணக்கான வாக்காளர்கள் தன்னிடம் தொடர்பில் இருக்கின்றனர். வாரணாசி தொகுதி வாக்காளர் பட்டியலில் எனது பெயரையும் இணைத்துள்ளேன்.

கடந்த சில மாதங்களாகவே தேர்தலுக்காகத் தயாராகி வருகிறேன். ஊழல் பிரச்னையை மையப்படுத்தியே இத்தேர்தலை சந்திக்கப் போகிறேன் என கூறியுள்ளார்.

உண்மையான நாட்டின் பாதுகாவலர் வஞ்சிக்கப் பட்டதற்கு எதிராக மக்கள் காய் நகர்த்திட மக்களுக்கு வேண்டுகோள். உண்மை பாதுகாவலருக்கு வாழ்த்துக்கள்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.