எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 அகவை சிறுமியும், அந்தக் குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வி.சமுத்ரா இயக்கும் ரணம் எனும் கன்னட படத்தில் வரலட்சுமி நடிக்கிறார். இப்படத்தில் அவர் நடுவண் குற்றப்புலணாய்வுத் துறை அதிகாரி வேடம் ஏற்றுள்ளார். ரணம் படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவுக்கு அருகில் உள்ள பாகலூரில் நடைபெற்று வருகிறது. இரண்டு கார்கள் மோதி தீப்பிடிப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக, அங்கிருந்த எரிவாயு உருளை வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. எரிவாயு உருளை வெடித்து சிதறியதில் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த 5 அகவை சிறுமியும், அந்த குழந்தையின் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த முறையாக அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்பட்டு வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,107.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



