அன்றாடம் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என்று தெரிவித்துள்ளார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங். அண்டம் (யுனிவர்ஸ்) முழுவதும் சம்ஸ்கிருதம் கற்பது எப்படி என்பதே பேச்சு! 26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவையில் நேற்று மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகங்கள் அமைப்பு சட்டமுன்வரைவு பதிகை செய்யப்பட்டு விவாதங்கள் நடைபெற்றன. இந்த விவாதத்தில் பேசிய பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங், அமெரிக்க (டுபாக்கூர்) நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் அன்றாடம் சம்ஸ்கிருதம் பேசினால் அது நமது நரம்புகளை சிறப்பாகச் செயல்பட வைத்து அதன் மூலம் சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்களைத் தள்ளி வைக்கும் என்று கண்டறிந்ததாக (பார்ப்பனிய புளுகு மூட்டையை) அவிழ்த்துக் கொட்டினார். அதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நடத்திய ஆய்வில், கணினி மென்பொருள்களை சம்ஸ்கிருத மொழியில் உருவாக்கம் செய்யப்பட்டால் அதில் எந்தக் குறைபாடும் வராது என்று கண்டுபிடித்துள்ளதாகவும் (தான் மக்களவைக்கு எடுத்து வந்திருந்த இன்னொரு புளுகு மூட்டையையும் அவிழ்த்துக் கொட்ட புளுகுகள் நெல்லிக்காய் போல உருண்டோட இரப்பர் பந்து அறையில் குழந்தைகள் குதித்தி விளையாடுவதைப் போல பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் உருண்டு புரண்டு விளையாடினார்கள். எழுந்து பார்த்தால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடம்பெல்லாம் ஒரே தங்க நகைகளாக ஜொலித்தது.) எனத் தெரிவித்தார். மேலும், உலகில் உள்ள மொழிகளில் 97விழுக்காடு மொழிகள் சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டவைதான் என்று (மூன்றாவது புளுகு மூட்டையை அவிழ்த்துக் கொண்ட படைத்தல், காத்தல், அழித்தல் தெய்வங்கள் மூவரும் மனம் மகிழ்ந்து பாராளுமன்றம் முழுவதும் தங்க வைர மாணிக்க நகை மழையைப் பொழிய வைத்தார்கள். “எதிர்கட்சிகள் பொருளாதார மந்தம் என்று பிதற்றிக் கொண்டிருந்தீர்களே போதுமா இந்த செல்வம்” என்று உற்சாகத்தில் அமித்சா அவர்கள் எதிர்கட்சிகளை ஏளனம் செய்தார். பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங்கை கைலாசா நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் ஒரு கிழமைக்கு பயன்படுத்திக் கொண்டு அனுப்பி வைக்கிறோம் என்று கேட்;;டிருக்கிறாராம் நித்தியானந்தா. அமெரிக்க அதிபர் டிரம்ப்- அந்த அமெரிக்க “டுபாக்கூர்” நிறுவனத்தின் மீதும் அதேபோன்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் மீதும் கடுங்கோபத்தில் இருக்கிறார். எதற்காக இந்த ஆய்வுகளை இந்தியாவிற்கு கொடுத்தீர்கள் இந்தியா சில மணி நேரங்களிலேயே சம்ஸ்கிருத மொழியால் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாகிவிட்டதே என்று. அயல்கோள் மனிதர்கள் தாங்கள் கோளையும் நோய் இல்லாத, பொருளாதாரம் வளம் நிறைந்த கோளாக மாற்றுவதற்காக இந்தியா சென்று, பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கணேஷ் சிங்கிடம் சமஸ்கிருதம் கற்று வாருங்கள் என்று ஒரு குழுவை அனுப்பியிருக்கிறார்களாம்.) -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,364.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



