குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவு இந்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 26,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவு இந்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் செவ்வாய்க்கிழமை அன்று திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம்- சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாஜக - அதிமுகவை கண்டித்து முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திருத்த முன்வரைவின் மூலம் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை போன்றவை தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது திமுக. தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு எடுக்கும் எந்த சிக்கல்களிலும் நானும் கலைஞரும் இரட்டைக்குழல் துப்பாக்கியாக செயல்படுவோம் என்று எம்ஜியார் அவர்கள் பலமுறை தெரிவித்து, இந்தியாவை ஆண்டுவந்த காங்கிரஸ் அரசின் வயிற்றில் பலமுறை புளியைக் கரைத்திருக்கிறார். தற்போதைய எடப்பாடி பன்னீர் அரசு- தங்கள் ஆட்சியை பாஜகவே பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். அதனால் பாஜகவின் எந்த நடவடிக்கைக்கும் வாலைஆட்டி தமிழர் உரிமைகளைக் காவு கொடுக்க அணியமாக இருக்கிறார்கள். வட இந்திய அரசியல்வாதிகளுக்கு, தொலைநோக்கோ, அரசியல் தெளிவோ கிடையாது. இந்தியாவில் ஹிந்தியை விடவும் அதிக மக்களுக்கு தாய்மொழியான, பெரிய மொழியான வங்காள மொழி பேசும் வங்காள மாநிலத்தவர்கள் ஹிந்தியைப் படித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களின் அறிவுக்கு என்ன மாதிரியான சான்றிதழ் கொடுப்பது. சிவசேனா வாய்கிழிய பேசிவிட்டு வெளிநடப்பு செய்கிறதென்றால் அவர்கள் சமூக அக்கறைக்கு எந்த வகையான விருது கொடுப்பது. மற்றமற்ற வடஇந்திய கட்சிகளுக்கும் கொடுப்பதற்கு சான்றதழ் விருதெல்லாம் எதுவும் கிடையாது. இதனால் வடக்கே ஆள்கிறவர்களுக்கு குளிர்விட்டுப் போயிருக்கிறது. அடுத்த தேர்தலில் திமுகவை தமிழ் மக்கள் அங்கீகரிக்கும் போதுதான் திமுகவைக் கண்டு அஞ்சத் தொடங்குவார்கள். அதுவரை சும்மா போராடி வைக்கலாம் தீர்வு எல்லாம் கிடைக்காது! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,364.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



