இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரண மாத்திரைகள், நுண்ணுயிர்எதிர்ப்பி மருந்துகள் உள்ளிட்ட முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது. 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான மருந்துகளின் விலை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின் விலை 4 விழுக்காடும், இதய ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்பட்டவர்களுக்கு பொருத்தப்படும் ஸ்டென்டுக்களுக்கான விலை 4.26 விழுக்காடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர 871 முதன்மைப் பயன்பாட்டு மருந்துகளின்; விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இந்த மாதத்திலிருந்தே அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.