தேர்தல் ஆணையம் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்திற்கு தடை விதித்தது மட்டுமில்லாமல், ஏதோ இலட்சங்களைக் கைப்பற்றுவது போல 146 பிரதிகளை கைப்பற்றியதுதான் குடிஅரசு நாட்டின் மிகப்பெரிய அவலம் என்று சான்றோர் பெருமக்கள் புலம்புகிறார்கள். நல்லவேளை பின்னர் தடையை விலக்கிக் கொண்டது தேர்தல் ஆணையம். 20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் ஊழல் தொடர்பாக வெளியாக இருந்த 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேர்தல் ஆணையம் நேற்று தடை விதித்து இருந்தது. ஓட்டு மொத்த இந்திய மக்களும் அதிர்ந்து போனார்கள்! என்னது! தேர்தல் நேரத்தில் கருத்துரிமைக்குத் தடையா? என்ற கேள்வி இணைத்தை கலக்கியது. ' நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல், என்ற புத்தகம் எழுத்தாளர் எஸ். விஜயன் மூலம் எழுதப்பட்டது. ரபேல் பேரத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து அவர் இந்த புத்தகத்தில் விவரித்து இருக்கிறார். ரபேல் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த புத்தகம் அதிக முதன்மைத்துவம் பெறுகிறது. இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் இன்று நடக்க இருந்தது. தி ஹிந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது. இந்த நிலையில்தான் 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிரச் செய்தது. நல்லவேளையாக- இதை சென்னை தேர்தல் அதிகாரிகள் தவறுதலாக தடை செய்துவிட்டதாக கூறப்பட்டது. பின் தேர்தல் ஆணையம் இந்த புத்தகத்தை வெளியிட விதித்த தடையை விலக்கிக் கொண்டது. அதன்பின் நேற்று மாலையே இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த தடை செய்யப்பட்ட விவகாரம் குறித்து தேர்தல் ஆணையமும் விளக்கம் கேட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் கொடுத்த இலவச விளம்பரம் காரணமாக இந்த, 'நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' வெளியீடு: தமிழ் எழுத்துலக வரலாறு காணாத சாதனை படைத்தது. இந்த புத்தக வெளியீட்டு விழா தடை செய்யப்பட்டதாக சொன்ன உடனே, புத்தகத்தின், 'கணினி படஅச்சுப் பதிப்பு' வெளியானது. இணையம் முழுக்க பலரிடம் பரப்பப்பட்டது. முகநூலில் பலர் இந்த நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் புத்தகத்தின் 'கணினி படஅச்சுப் பதிப்பு' ஐ பகிர்வு செய்து இருந்தனர். புலனத்திலும்இந்த புத்தகம் பலருக்கு பகிர்வு செய்யப்பட்டது. விளைவு நேற்று மட்டும் இரவுக்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான, நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் 'கணினி படஅச்சுப் பதிப்பு' தமிழகத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல நேற்று பிரச்சனைகளுக்கு பின் நடந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் புத்தகம் படுவேகமாக விற்றுத் தீர்ந்தது. முதற் கட்டமாகவே 8000 புத்தகங்கள் இரண்டு மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்தன. தமிழகம் முழுக்க ஒரே நாளில் இந்த புத்தகம் தீ ஆனது. தேர்தல் ஆணையம் இந்தப் புத்தகத்திற்கு தடை விதித்தது மட்டுமில்லாமல், ஏதோ இலட்சங்களைக் கைப்பற்றுவது போல 146 பிரதிகளை கைப்பற்றியதுதான் குடிஅரசு நாட்டின் மிகப்பெரிய அவலம் என்று சான்றோர் பெருமக்கள் புலம்புகிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.