Show all

மின்சார வாகனங்களை ஒரு காசுக்குக் கூட மதிக்க விரும்பாத மக்கள்

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மாசில்லா வாகனங்களை உருவாக்குதல், எரிபொருட்களின் இறக்குமதிகளை குறைத்தல் வகையில்,  மின்சார வாகனங்கள் இந்தியாவிற்கு மிகச் சிறந்த தீர்வாகும். அரசால் கொள்கை அளவில் முன்னெடுக்கப் பட்டாலும், நடைமுறையில் பெரிதான நடவடிக்கை ஏதும் இல்லாததால் இந்தியாவில்   மின்சார வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கவும், நிலைத்தன்மை   அடையவும், இன்னும் பல ஆண்டுகளாகும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரிக்க வேண்டுமெனில் அதன் விலை மிகவும் குறைய வேண்டும். மின்கலன்களின் விலை குறையும் பொழுது மின்சார வாகனங்களுக்கான விலையும் குறையும்.

இந்த நிலையில், மின்கலன்களின் விலை  20-25 விழுக்காடு  குறைய இன்னும் சில ஆண்டுகள் ஆகலம் என கருதப் படுகிறது. மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கும் நடுவண்  அரசின் திட்டங்கள் எளிமையும் ஆக வேண்டும். 
இந்தியாவில் மின்சார வாகனங்களின் வடிவமைப்புக்கு எந்த நிறுவனமும் இன்னும் சிறப்பான பொறுப்பு எடுக்கவில்லை  மின்சார வாகனங்களை ஒரு காசுக்குக் கூட மதிக்க விரும்பாத மக்கள் மனநிலை மாற வடிவைமைப்பும் விலைகுறைப்பும் கட்டாயம். அந்த நிலை ஏற்பட இன்னும் பல ஆண்டுகள் ஆகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,903.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.