Show all

ஏர்டெல்லில் அறிமுகம்! ஆதாய அட்டை இல்லாமல் பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கலாம்

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  வாடிக்கையாளர்களுக்கு அட்டை   இல்லாமல் பணம் வழங்கும் இயந்திரத்தில்  பணம்  எடுக்கும் வசதியை, ஏர்டெல்  வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது

இந்தச்  சேவையைப் பயன்படுத்த, ஐஎம்டி வசதி கொண்டுள்ள பணம் வழங்கும் இயந்திரத்திற்கு சென்று, என்ஏர்டெல் செயலி மூலம், பணம் எடுக்க, பதிவு செய்யப்பட்டுள்ள ஏர்டெல் எண்ணில் இருந்து பணத்தை எடுக்கலாம் 

முதல் இரண்டு பண பரிவர்தனைகள் இலவசமாக அளிக்கபப்டும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து, 25 ரூபாய் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது 20,000 பணம் வழங்கும் இயந்திரங்களில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் 1,00,000 பணம் வழங்கும் இயந்திரங்களில் இந்த வசதி கொண்டு வரப்படும் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,903.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.